Desikan

  • Back to Main page

ரங்கராஜனும் ரங்கநாதனும்!

 சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தில்....

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;

- ஆண்டாள் அருளிய திருப்பாவை( 28 ) 

இந்த வரிகளுக்கு எளிய விளக்கம்:

"எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா;
நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது."  

Sesarayar

சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக்கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது "இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்

பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன். நீயும் தொட்டுப் பார்" என்பார்.

அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும்வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார். " ஏம்ப்பா வெயில்ல போற?" என்று கேட்டால், "யாருக்குத் தெரியும்?  இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?" என்பார்.

அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில், அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை, அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

- 0 - 0 -

"எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு. என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும். முடியுமா?" என்று என்னிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா கேட்டார்.

ஒவ்வொரு வாரமும் அவரை பார்க்கும் போதும் "இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்" என்று கேட்பார்.

"நிச்சயம் போகலாம்," என்று சொல்லியும் அவர் பிறந்தநாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.

முதல் முறை ரயிலில் போகும் குழந்தை போல் ஆர்வமாக இருந்தார். அன்று எங்கள் ராசி ஒரு மார்க்கமாக இருந்ததால், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் எல்லாம் ஒரு 'சைடாக' கிடைத்தது. 'சைடு அப்பர்', 'சைடு லோயர்' !

"ரொம்பக் குளிருமோ?" என்று ரயில்வே கொடுத்த போர்வையைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கேட்டார்.
 
டிக்கேட் பரிசோதிக்க வந்தவரிடம், "ஸ்ரீரங்கம் எத்தனை மணிக்கு வரும்... எங்களைக் கொஞ்சம் எழுப்பிவிட்டுடுங்க" என்றார்.

ஐந்து அடி ஆறு அங்குலம் இருக்கும் எனக்கே முழுதாக நீட்டினால் சைடு பர்த்தில் கால் கட்டை விரல் மடங்கும். சுஜாதாவிற்கு?

"சார், வேணும்னா வேற யார்கிட்டயாவது கேட்டு பர்த் மாத்தித் தரேன்," என்றேன்.

"வேண்டாம்,  இதுவே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு," என்று காலை மடக்கிவைத்துப் படுத்துக்கொண்டார்.

"கால் முழங்கால் வரைக்கும் போர்த்திவிடு, குளிரித்துனா இழுத்துக்கறேன்" என்றவர், பின் தூங்கிப் போனார்.

எதோ நினைப்பில் இருந்த டிக்கெட் பரிசோதிப்பவர், சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தார். சுஜாதா தூங்கியபின் என்னிடம் வந்து "'இவர்தானே மிஸ்டர் சுஜாதா?" என்று என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றார். அவர் பார்வையில், "அடடே, அவரிடம் கொஞ்சம் பேசியிருக்கலாமே" என்ற ஏக்கம் தெரிந்தது.

ஸ்ரீரங்கத்தில் காலை ஐந்து மணிக்கு முன்பு இறங்கியவுடன் சுஜாதா உற்சாகமும் சந்தோஷமுமாக, "கோயிலுக்கு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்" என்றார். 

- 0 - 0 -

Venugopalan

காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன் (திரு.எஸ்.ராஜகோபாலன் ) கிளம்பினோம். போகும் முன், "எனக்குக் கொஞ்சம் இட்டு விடு" என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.

"வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?"

உள் ஆண்டாள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புற சிற்பங்களைப் பார்த்தார். "நம்ம .... இருக்கானே அவன் எப்பவும் இது பக்கத்திலேயேதான் இருப்பான். அவன் இப்ப எங்கேடா?" என்று தம்பியிடம் கேட்டார். பழைய நினைவுகள்...

"தேசிகன், இந்தச் சிற்பத்துல மட்டும்தான் பெண்களோட அங்கங்களை மிகைப்படுத்தாம ஒழுங்கான அனாடமில செதுக்கியிருப்பாங்க," என்றார்.

"நீங்க சொல்லியிருக்கிங்க, ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குக் கூட இதை வரைஞ்சிருக்கேன்," என்றேன்.

Srirangam Girl

"இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பானை கொளுத்துவாங்க... இங்கே தான் ஸ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடக்கும்... எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!"

கோயிலுக்குள் போகும்போது கார்த்திகை கோபுரவாயிலில் திருப்பதியில் இருப்பது போல சிறிய குழாய் வழியாக நீர் கசிந்து கால்களை அலம்புவதைப் பார்த்து, "அட ஸ்ரீரங்கத்லயும் வந்துடுத்தா?" என்றார்

அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால் சிறிது நடந்தபின் ஆங்காங்கே சற்றுநேரம் உட்கார்ந்துகொண்டார். அவர் அப்படி உட்காரும்போதெல்லாம் எங்களுக்கு அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. கருட மண்டபத்தில் உட்கார்ந்து, வேடிக்கை பார்த்தபடி, பேசிக்கொண்டு இருந்தார். எல்லாம் நினைவுகள்.

கோயிலுக்குள் பெருமாள் சேவிக்க நெருங்கும்போது அவர் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது. சேவித்துவிட்டு வெளியே வந்தபோது என் தோளை அழுத்திவிட்டு, "எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!" என்ற போது அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேங்கியிருந்ததைப் கவனிக்க முடிந்தது.

பின் தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார்.
 
"நீங்களும் உங்க தம்பியும் கொஞ்சம் நேரம் பேசிண்டிருங்க. நான் இருந்தா பர்சனலா பேச முடியாது. நான் இப்படியே ஒரு ரவுண்ட் போய்விட்டு வரேன்," என்று கிளம்பினேன்.

"நீங்க இருந்தா பரவாயில்ல தேசிகன்".

"இல்ல சார், நீங்க பேசிண்டு இருங்க. நான் மேட்டு அழகியசிங்கர் சந்நிதிக்குப் போயிட்டு வரேன். அங்க ஓவியங்கள் நன்னா இருக்கும்."

நான் போய் அவைகளை என் டிஜிட்டல் கேமராவில் கவர்ந்துக்கொண்டு வந்து காண்பித்தேன். ஆர்வமாகப் பார்த்தார்.

Srirangam Digital Oviyam
"சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர்ச் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார். வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப்பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி III, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்"
என்று 'கற்றதும் பெற்றது'மில் சுஜாதா எழுதியிருந்தார்.

ஒன்பது மாதங்கள்( பிப் 27, 2008 ) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்

- 0 - 0 -

அவர் ஆசார்யன் திருவடிகளை அடைந்து சில நாட்கள் கழித்து, அவரது தம்பி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். நான் மேட்டு அழகியசிங்கர் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதன் விபரம் அதில் இருந்தது.

 

"

Sujatha & Brother

..... ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளாகிய நம்பெருமாளை சேவிக்கும் போதும், நம்மை ஒருவித பரவசமான மனநிலைக்கு ஏன் ஆட்படுத்துகின்றன என்று அந்த உணர்வுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க பல சமயம் நினைததுண்டு. மற்ற திவ்யதேசங்களில் இல்லாமல், ஏன் ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்தகைய உணர்வு வருகிறது என்று நானும் என் சகோதரனும் (ரங்கராஜன்) அன்று பேசிக்கொண்டோம். யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழவைக்கிறது? பிறப்பணுவிலேயே(Genes) சொந்த ஊர், மொழி உணர்வு எல்லாம் வந்துவிடுகிறதோ ?

அதற்கான காரணம் 'இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்' என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான். கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். பெருமாளை நன்றாக சேவிக்கும்போது அந்த திவ்யமங்கள ரூபத்தில் எங்கள் தாய் தந்தையரை பார்க்கும்படியும் ரங்கராஜனிடம் சொன்னேன். அவனும் 'ஆம், அது தான் உண்மை' என்று ஆமோதித்தான். அந்த உண்மையை தான் அறிந்ததால்தான் இங்கு வந்து பெற்றோருடன் நெருக்கமாக இருக்கும் ஆர்வம் மேலோங்கியதாகச் சொன்னான்.

அவன் உயிருடன் இருக்கும்வரை அந்த ஆசையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலவில்லை; ஆனால் தற்பொழுது அவனது ஆத்மாவும் ரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டது...."

... என்னை அன்புடன் 'ராஜப்பா' என்றே அழைப்பான்" என்று கடிதத்தை முடித்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கம் சென்று நம்பெருமாளை சேவிக்கும்போது, என் அப்பாவையும், ஸ்ரீரங்கம். எஸ்.ஆர் என்கிற சுஜாதா ரங்கராஜனையும் பார்க்க முடிகிறது.

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு மற்றொரு பெயர் ரங்கராஜன்.

( நான் எழுதிய இந்த கட்டுரை, இந்த வாரம் விகடனில்( 24.02.10 ) வந்தது. பிரசுரித்த அவர்களுக்கு நன்றி. )

( கோட்டோவியங்க -  ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், ஸ்ரீ வேணுகோபாலன் சந்நதி, சந்நதியில் இருக்கும் பெண் சிற்பம் ( இவை எல்லாம் ஸ்ரீரங்கத்து கதைகளுக்கு வரைந்தது )

( படங்கள்: படம் 1: மேட்டு அழகியசிங்கர் கோவிலில் சுஜாதாவிற்கு டிஜிட்டலில் படம் எடுத்து காண்பித்தது. படம் 2: சுஜாதாவும் அவர் தம்பி திரு ராஜகோபாலனும் அவர்களுடன் ஸ்ரீரங்கம் போன போது எடுத்தது )

 

 

 

 

 

 

Desikan - clock 23:57:05 - Friday, 19.02.10 - தேசிகன் - 1725x - pencil Permalink
Karma points: 5. Do you like this article? [Thumbs upthumbs-up - Thumbs upthumbs-down]

RSS 2.0 feed, Trackback, print preview, email this article

  • RSS 2.0 feed of this article, including comments: RSS 2.0 comments feed
  • You can [print] this article, [email] it, or export a [PDF].

Local search ரங்கராஜனும் ரங்கநாதனும்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

Comments:

  1. [1] from: sathish

    Very happy to read about ur visit to srirangam temple with sujatha sir,Thanks to rajagopalan sir for sharing the details,

    Great drawings desikan sir, Very happy to comment on this article.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Saturday, 20.02.10, 01:31:25
  2. [2] from: RAMANI

    good

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Saturday, 20.02.10, 10:17:14
  3. [3] from: நடராஜன்

    வணக்கம் தேசிகன். விகடனில் சில/பல வரிகள்/புகைப்படமும் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதனால் ஒரு சின்ன ஜெர்க் தெரிந்தது.
    ஆண்டாளின் ‘என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றமே ஆவொம் - உனக்கே நாம் ஆட்செய்வோம் - அவர் கடைசியில் கேட்ட பாசுரம் அல்லவா?

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Saturday, 20.02.10, 12:14:23
  4. [4] from: Krishnan

    As I commented earlier, I reread the piece several times. It is wonderfully written.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Saturday, 20.02.10, 13:00:59
  5. [5] from: Subbu

    Thanks Desikan,
    I read this article in Ananda Vikatan too. A fitting tribute to Sujatha 2nd anniversary. Sujatha still lives through his writings.

    Regards,
    Subbu

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Saturday, 20.02.10, 16:15:58
  6. [6] from: Sampathkumar

    Dear Desikan Sir,

    Tears rolled down my cheeks! superb! I must touch the "Pillers" next time I visit Srirangam.Thanks for the article.

    regards,
    Sampathkumar

    reply to this comment
    1. this comment inspired Desikan — #7
    Sunday, 21.02.10, 08:33:55
  7. [7] from: Desikan

    inspired by sathish — #1 inspired by RAMANI — #2 Thanks.
    inspired by நடராஜன் — #3 மூன்று பக்கத்தில் அடக்க வேண்டி, சில பகுதிகளை எடிட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
    inspired by Krishnan — #4 நன்றி.
    inspired by Subbu — #5 நன்றி
    inspired by Sampathkumar — #6 Glad that the message as reached many people.

    reply to this comment Sunday, 21.02.10, 14:54:50
  8. [8] from: RAJAGOPAL.V

    Dear Sujatha Desikan
    Ungal articlle-i padikkumbothu manathai ennavo seidhadhu-Vathiar pirivinal. Irandam andukku SIRANTHA ANJALI. Thanks Sujatha Desikan Ungal article-i ponru ungal drawigs-um SUPERB.
    Rajagopal

    reply to this comment Sunday, 21.02.10, 19:31:39
  9. [9] from: sathish

    Hello Desikan sir,
    I have read this article more than 10 times and still feel like reading again and again. I dont know the reason. My next visit to srirangam is going to be a special one and I will remember this article for ever.

    Thanks again for the great work.

    reply to this comment Sunday, 21.02.10, 22:55:27
  10. [10] from: ச.திருமலை

    சுஜாதா தேசிகன்

    அதற்கான காரணம் 'இந்தப் பெருமாளை சேவிக்கும்போது, நம் தாய் தந்தையர், பாட்டனார், முப்பாட்டனார்களை இந்தப் பொருமாளின் மூலம் பார்க்கிறோம்' என்பதை அன்று உணர்ந்தோம். அவர்கள் பலப் பல வருடங்களாக இந்தப் பெருமாளின் முக விலாசத்தைப் பார்த்துப் பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இவனுள்ளேயே வாழ்கிறார்கள்; இவன் பாதங்களையே சென்றடைந்திருக்கிறார்கள்; நம் வாழ்வுகளுக்கு ஓர் இடைவெளியற்ற தொடர்பை இவனே ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

    அற்புதமான வரிகள். கண்களில் நீர் வரவைத்த கட்டுரை. சத்தியமான வார்த்தைகள். ஒவ்வொரு முறை எங்கள் ஊர் கோவிலுக்குள் வழிவழியாக முன்னோர்கள் வணங்கி வந்த கோவிலுக்குள் செல்லும் பொழுதும் இதையே உணர்ந்திருக்கிறேன். சுஜாதாவை ஏதோ ஒரு ஈ வெ ரா போல புரட்ச்சிக்கார நாஸ்திகர் என்று தமிழ் நாட்டில் ஒரு பத்திரிகை மாஃபியாக் கும்பல் சித்தரித்து வருகிறது. இந்த சூழலில், இந்தக் கட்டுரை அவரது ஆள் மனதை வெளிப்படுத்தியிருக்கிறது. நெகிழ்ச்சியான ஒரு கட்டுரை. நன்றிகள் பல

    அன்புடன்
    ச.திருமலை

    reply to this comment Sunday, 21.02.10, 23:08:02
  11. [11] from: PADMANABAN

    வாத்தியார பத்தி எவ்வளவு படிச்சாலும் சலிக்காது ... நல்ல பயணம் .. சிஷ்யன் என்கிற நிலையிலும் , நண்பர்ங்கற வகையிலும் , எங்க எல்லோரோடைய பிரதிநிதியாக ஸ்ரீரங்கத்திற்கு ஸ்ரீ ரங்கராஜனை அழைத்து சென்றுள்ளது, நிச்சயமாக பெருமை படவேண்டிய விஷயம் .
    சிற்பங்கள் பார்த்து உங்களிடம் சொல்லிய கருத்துக்கள் , எந்த சுழலிலும் சுவாரஸ்யத்தை விடமாட்டார் என்பதை குறித்து காட்டின ..அனாடமி பற்றிய விஷயங்கள் ,,அப்புறம் '' அலச்சல்'' நண்பர் ஒருவரும் அதை சுற்றி வந்த விஷயம் .. கொல்லென்று சிரிப்பு வந்திருக்குமே. வலம் வரும்பொழுது நீர் வருவது கண்டு ஒரு குழந்தையின் உற்சாகம் ... புகைப்படத்தில் ராஜகளையிலும் அந்த களைப்பு பார்த்தவுடன் தோன்றிய விஷயங்கள் ... வாசகனை / ரசிகனை திருப்தியும் சுவாரஸ்யமும் கொடுக்க ,எத்தனை தூக்கத்தை இழந்திருப்பார் ..
    எத்தனை படித்திருப்பார் ...நாம் என்ன செய்யபோகிறோம் ? குறைந்த பட்சம் , நிறைய வாசிப்போம்.
    கற்றதும் பெற்றதுமில் சுவாரஷ்யம் ... இமாம் பசந் இனிப்பு.. அண்ணனும் தம்பியும் உரையாடியவை ... ஜென்மாந்திர நினைவுகளை தாலாட்டி உருக்கும் இடம் ..... அவரோடு இருந்து பல அனுபவங்களை பெற்ற நீங்கள், உண்மையில் வாழ்த்தப்பட்டவர் சுஜாதா தேசிகன் ..... அந்த அனுபவங்களை அவ்வப்பொழுது பகிர்ந்துகொள்ளுங்கள் ..... பலப்பல நன்றிகள் ... நிறைய வாழ்த்துக்கள் .

    reply to this comment Monday, 22.02.10, 01:04:47
  12. [12] from: Kannan Seetharaman

    it remainds me story line of AVATR movie..where people workship a tree share the knowldge and to connect with elders people.... ( for those don;t belive in god)

    We are using our "rangan" as a family tree..

    reply to this comment Monday, 22.02.10, 11:53:20
  13. [13] from: K Sundararajan

    திரு தேசிகன் அவர்களுக்கு,
    பல அருமையான விஷயத்தை ஒரு சில வார்த்தைகளில் புரிய வைக்கும் திறமை சிலருக்கே இருக்கும். இந்த வகையில் திரு சுஜாதா ஒரு மேதாவி. எத்தனையோ முறை கோவில்களுக்கு போய் விட்டு அந்த கோவில்களை விட்டு வரும்போது மனம் வராது. அதற்கான காரணம் திரு சுஜாதாவும் நீங்களும் பேசிக்கொண்டது போலவும் இருக்கலாம்.
    தாசன் சுந்தரராஜன்
    sundark@aaditya55.com

    reply to this comment Monday, 22.02.10, 12:21:31
  14. [14] from: Umasankar

    Dear Desikan,

    I have been reading your articles on Sujatha for quite sometime. Being an ardent Sujatha Fan ( Have been reading his writings for around 35 years now), most of the times I enjoyed your writings too. But the above article tries to bind Sujatha within a boundary. I am an atheist and that never stopped me from loving his writing. So, Let Sujatha be open to all!

    reply to this comment Monday, 22.02.10, 16:34:10
  15. [15] from: பாரதி மணி

    விகடனில் படித்திருந்தாலும், இதையும் படிக்கத்தூண்டியது. தேசிகன், நல்ல கட்டுரை.

    அன்புடன்,
    பாரதி மணி

    reply to this comment Monday, 22.02.10, 17:17:21
  16. [16] from: kesavan.t.a

    recently when I went to srirangam i felt unexplained peace and tranquility in the karpagragam .There is something extraordinary in that place for those who believe in Him,Somehow I remembered Sujatha when i was waiting in the Que.Time so fast 2 years have gone like two days.Excellent tribute, nice photographs.

    reply to this comment Monday, 22.02.10, 18:18:49
  17. [17] from: Sudhakar

    Hello Desikan,

    Nice article – timely tribute to Sujatha’s second anniversary. It is hard to believe that it has been 2 years. He will always live amongst us in our memories. You could have uploaded bigger versions of your art work in this article.

    Anbudan,
    Sudhakar

    reply to this comment Tuesday, 23.02.10, 04:44:12
  18. [18] from: N.L.SARAVANAN

    Dear Sujatha Desikan, You are the opt person to swear our 'VATHIYAR's name.
    Once I come across the details of our beloved vathiyar, I get tears in my eyes.

    Your writings are good. We feel your writings as Sujatha's writing. You are the great person who is giving peace of mind to the losers of the great Vathiyar.

    Keep it up.

    reply to this comment Tuesday, 23.02.10, 14:49:34
  19. [19] from: Srinivas

    Timely article on Sujatha's anniversary.
    I also felt the same about Indian temples and temples in other countries.
    In India's temples, when we go we are walking in the steps of our forefathers, the places they touched etc. So there is an emotional feeling when we go to such temples.
    In temples abroad, this emotional attachment is missing.

    reply to this comment Wednesday, 24.02.10, 22:11:08
  20. [20] from: Akila

    தேசிகன்,
    ஒன்பது மாதங்கள்(பிப் 27, 2008) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார் என்னும் வரிகளில் வரும் வருடத்தில் இருக்கும் Emoticonஐ நீக்கவும்.

    நன்றி.

    reply to this comment Thursday, 25.02.10, 17:15:38
  21. [21] from: லாஸ் ஏஞ்சல்ஸ்

    அன்புள்ள தேசிகன்,

    அற்புதமான கட்டுரை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ’எல்லே’யிலும், சென்னையிலும் வாத்தியாருடன் நெருங்கிப் பழகிய நாட்கள் பற்றிய நினைவுகள் என்னையும் வந்து வந்து வாட்டுகின்றன.

    உங்கள் கட்டுரை என் நெஞ்சைத் தொட்டது. அவரோடு ஒரு முறை ஸ்ரீரங்கம் போய் வந்த மாதிரி ஒரு சிலிர்ப்பு.

    தொடர்பில் இருங்கள்.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

    reply to this comment Friday, 26.02.10, 00:51:17
  22. [22] from: Guru Prasad.P

    Dear Sir,

    I had a urge to visit my native place immediately, after reading the article. A real tribute to Sujatha and this is a great forum for Sujatha fans.

    reply to this comment Friday, 26.02.10, 21:55:55
  23. [23] from: Raghavan

    சுஜாதா சார் ! WE LOVE YOU ! WE MISS YOU ! எதாவது பண்ணிட்டு திரும்ப வந்துருங்களேன் ! reply to this comment Saturday, 27.02.10, 08:08:06

  24. [24] from: Elangovan Angannan

    Very few articles bring tears of amazement, respect, devotion,and love. This is one such article and requires great skill to write such ones.

    reply to this comment Monday, 01.03.10, 16:48:28

Comment Info:

If you like, you may use the following semi-tags in your comments:

Add new comment:

Comments must be approved before being published. Thank you!