Desikan

  • Back to Main page

சொர்க்கம், நரகம் - இடைவெளி 250km

null

பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராணக் கதை இப்படிப் போகிறது... 

புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகவேண்டும் என்ற ஆசையோடு புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்து பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்கு பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான்.

புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலமாக அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகன் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து லட்சியமும் செய்யாமல் அலட்சியமும் செய்யாமல் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு, “சற்று இரும்! நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்," என்றான். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும், ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.

புண்டரீகன் பணிவிடை செய்துவிட்டு வந்து, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரிக்க, "நான் துவாரகா நாதனான கிருஷ்ணன், இவள் என் மனைவி ருக்மணி” என்று சொல்கிறார்.

புண்டரீகன் பூரித்துப் போய், குடும்ப சகிதமாக பகவான் காலில் விழுந்து, இங்கேயே சந்தரபாகா நதிக்கரையிலேயே நித்தியவாசம் செய்யவேண்டும்" என்று கேட்கிறான்.

இன்றும் பண்டரீபுரத்தில் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு செங்கல் மேல் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் சேவை சாதிக்கிறார். ஞானேஷ்வர், நாமதேவ், ஏதநாதர், ஜனாபாய், ஞானதேவர், கபீர்தாஸர், துக்காராம், ஏகநாத் புரந்தரதாஸர், விஜயதாசர், மோகனதாஸர், போன்ற பல கன்னட, மஹாராஷ்டிர பக்தர்கள் பாண்டுரங்கனைப் பற்றி ஏராளமான கன்னடக் கீர்த்தனைகளையும், மராட்டிய அபங்கங்களையும் பாடியுள்ளார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டே நாளில், மூன்று கல்யாணத்திற்காக பூனாவிற்குச் சென்றிருந்தேன். பண்டரீபுரம் பூனாவிலிருந்து 250km தூரத்தில் இருக்கிறது. மூன்று கல்யாணதிற்கு நடுவில் பண்டரீபுர விட்டல் ரகுமாயியை சேவித்துவிட்டு வருவது என்று முடிவு செய்து டாக்ஸியில் பழைய ஹிந்தி பாடல்களுடன் பயணித்தேன்.

ஆட்டு மந்தை போகும் வரை காத்திருக்கும் ஹோண்டா சிட்டி மட்டும் தான் சிட்டி மற்றது எல்லாம் கிராமம் தான். ஆண்கள் எல்லோரும் காந்தி குல்லா போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சூரியகாந்திப் பூ, வெங்காயம், மாதுளை, கரும்பு என்று விதவிதமாக விவசாயம் செய்கிறார்கள். தாய்மார்கள் வயலில் வேலை செய்ய அவர்கள் குழந்தைகள் மரத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  

null

வழியில் கரும்புச் சாறு ஒரு கிளாஸ் கலப்படம் இல்லாமல் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. போகும் போது ஒரு பஸ் கூட என் கண்ணில் தென்படவில்லை ஆனால் பில்லு பார்பர் பட போஸ்டர்கள் கண்ணில் பட்டது. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் எவ்வளவு பேர் பயணம் செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன். ஜீப் வாய் இருந்தால் அழும். வழி நெடிகிலும் தாபாக்கள் நிறைய இருக்கிறது. (இஞ்சியை டம்ளர் அடியில் நசுக்கி இவர்கள் போடும் சாய் பிரமாதம்.)

போகும் போது சில இடங்களில் "வீ" என்று சொன்னால் போதும் மற்றவர் காதில் அது "விட்டல், விட்டல்" என்று விழும். ரோட்டில் அவ்வளவு மேடு பள்ளம்.

பண்டரீபுரம் சென்ற போது மாலை மணி 4 ஆகிவிட்டது. காரை சந்தரபாகா நதியில் தண்ணீர் இல்லாததால் அங்கேயே பார்க் செய்ய முடிந்தது. சந்தரபாகா நதி பற்றி மஹாபாரதத்தில் குறிப்பு வருகிறது. "சார் நான் உங்களுக்கு கைடாக வருகிறேன், பண்டரி நாதனை பக்கத்தில் தரிசனம் செய்துவைக்கிறேன். எல்லாம் முடித்துவிட்டு வரும் போது எனக்கு 51ரூ. தந்தால் போறும்," என்றார் ஒருவர். நேரம் அதிகம் இல்லாததால் சரி என்று இந்த குறுக்கு வழிக்கு ஒப்புக்கொண்டேன்.

null

உடனே  சந்தரபாகா நதிக்கரையிலிருந்து குறுக்கு வழியில் எங்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கே 20 அடி தூரத்தில் பெருமாள் தெரிகிறார், தரிசனம் செய்துகொள்ளுங்கள் என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றம். ஏன் என்றால் பண்டரீபுர விட்டலை நாம் தொட்டு சேவிக்கலாம் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன். எனக்கு இது சம்மதம் இல்லை என்று மீண்டும் வெளியில் தர்ம தரிசன கியூவில் போய் நின்றோம். பண்டரிபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. (நாங்கள் போன சமயம்) திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டு இருக்கிறது. நாலரை மணிக்கு பெருமாளுக்கு வஸ்திரம் மாற்ற நடை சாத்திவிட்டு மீண்டும் ஐந்து மணிக்குத் தான் திறப்பார்கள் என்றார்கள். திண்ணை மாதிரி கட்டிவைத்திருப்பதில் அமர்ந்தோம். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

வந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு ஊர்காரர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். கியூவை மீற வாய்ப்பு இருந்தும் மீறவில்லை. எல்லோரும் "பாண்டு ரங்க ஹரி போலோ" என்று கைத்தட்டி பஜனை செய்ய ஆரம்பித்தார்கள். ஞானதேவர், புரந்தரதாசர் பஜன்களை எல்லோரும் வாய்விட்டு பாடினார்கள். யாரும் ஊர்க் கதை பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் அந்த பஜனில் ஆழ்ந்தது ஒரு நிறைவான அனுபவம். இது போன்ற பக்தி தமிழ்நாட்டுக் கோவில்களில் பார்த்ததில்லை. சரியாக ஐந்து மணிக்கு கதவு திறக்கப்பட  பாண்டுரங்கன் பக்கத்தில் போய் அவரைத் தொட்டு சேவித்துவிட்டு, நெற்றியை அவர் கால்மேல் வைத்து பாத சேவை கிடைத்த பின் வெளியே வந்தோம்.

கோயிலைச் சுற்றி நிறைய கடைகள் இருக்கின்றன. கோபி சந்தனம், ஜால்ரா, டோல், சின்ன சின்ன விக்கிரகங்கள், பஜனை புத்தகம், பாண்டுரங்கன் படங்கள், குங்குமம், மஞ்சள், சக்கரை மிட்டாய், துளசி மாலை என்று கிடைக்கிறது. சினிமா பாடல்கள் MP3, நியூஸ் பேப்பர் கூட கிடைப்பதில்லை. யாரும் ஏமாற்றுவார்கள் என்று தோன்றவில்லை.

தீர்த்தயாத்திரை முடித்துவிட்டு திரும்பி வர இரவு பதினொன்று ஆகிவிட்டது. கல்யாண மண்டபத்தில் தீர்த்தத்தால் பலர் யாத்த்திரைக்குச் சென்றிருந்தார்கள். சொர்க்கமும் நரகமும் 250கிமீ தூர இடைவெளியில் இருக்கிறது!

வழக்கம் போல் படங்கள் இங்கே

Desikan - clock 14:49:03 - Monday, 09.03.09 - தேசிகன் - 2307x - pencil Permalink
Karma points: 3. Do you like this article? [Thumbs upthumbs-up - Thumbs upthumbs-down]

RSS 2.0 feed, Trackback, print preview, email this article

  • RSS 2.0 feed of this article, including comments: RSS 2.0 comments feed
  • You can [print] this article, [email] it, or export a [PDF].

Local search சொர்க்கம் நரகம் இடைவெளி 250km

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

Comments:

  1. [1] from: sumathi

    ஹாய் தேசிகன், என்ன ரொம்ப நாளாச்சு பேசி. எப்படி இருக்கிறீர்கள்?உங்க இந்த பதிவை படிச்ச உடனே எனக்கும் கூட போகனும் னு ஒரு ஆசை வந்துருக்கு. பாக்கலாம். படங்கல் ரொம்ப அழகாயிருக்கு. //கியூவை மீற வாய்ப்பு இருந்தும் மீறவில்லை.//
    //பஜன்களை எல்லோரும் வாய்விட்டு பாடினார்கள். யாரும் ஊர் கதை பேசவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் அந்த பஜனில் ஆழ்ந்தது ஒரு நிறைவான அனுபவம். இது போன்ற பக்தி தமிழ்நாட்டுக் கோவில்களில் பார்த்ததில்லை. // தேசிகன் உங்களுக்கு ஆனாலும் பேராசை தான். நம்மூருல இன்னும் இந்த சீரியல்களையே இன்னும்
    பாக்க முடியலையே னு ஏங்கறவர்கலள் இருக்க நீங்க இதெல்லாம் கேக்க கூடாது.
    நன்னாயிருக்கு தேசிகன்.

    reply to this comment Monday, 09.03.09, 15:29:26
  2. [2] from: KCDesi

    Hello Desikan

    Amazing pictures. Thanks. I really enjoyed it.

    KCDesi

    reply to this comment Tuesday, 10.03.09, 02:54:39
  3. [3] from: Suresh Kumar

    தேசிகன் - நல்ல கட்டுரை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கொஞ்சம் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களிலெல்லாம் பஸ் வசதி என்பது அரிது. எம்.ஜி.ஆர் மற்றும் ஈரோடு அமைச்சர் முத்துசாமி அவர்களின் முயற்சியால் தான் தமிழகமே பஸ் வசதியில் முன்னணியில் உள்ளது. தமிழகத்தின் எந்த மூலையில் ஒரு நாளின் எந்த நேரத்தில் நுழைந்தாலும், மாறி மாறி பஸ் பிடித்து (சீட் கிடைத்து உட்கார்ந்த படி) எந்த கோடிக்கும் செல்லலாம்.

    ஜெயாடிவியில் சனி, ஞாயிறு காலை 6.00/6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கோவிந்தபுரம் விட்டல்தாஸ் சுவாமிகளின் பாண்டுரங்க விட்டல பஜனை மற்றும் கதை சொல்லல், கேட்டதுண்டா ? சென்னை செல்லும் போது நேரிலும் இதனை அனுபவிக்கலாம்.

    http://www.vittaldas.com/home.html...
    Don't miss to watch Sri Vittaldas Maharaj's Bhaktha Vijayam at Sri Krishna Gana Sabha, Chennai in JAYA TV on Sundays at 6 AM IST

    reply to this comment
    1. this comment inspired Desikan — #4
    Tuesday, 10.03.09, 16:49:50
  4. [4] from: Desikan

    inspired by Suresh Kumar — #3 Dear Suresh Kumar thanks for the information.

    reply to this comment Tuesday, 10.03.09, 17:03:21
  5. [5] from: Padmaja

    Hello Desi Sir,
    Nice to read your article after a long time.
    Good Experience. Have to visit such places at least once in lifetime.
    Keep writing..

    reply to this comment Wednesday, 11.03.09, 09:04:37
  6. [6] from: Desikan

    மறந்து போய் திருத்தப்படாத கட்டுரை பிரசுரம் ஆகிவிட்டது. திருத்திய கட்டுரை இப்போழுது.

    reply to this comment Wednesday, 11.03.09, 11:11:07
  7. [7] from: t.r.pattabiraman

    படங்கள் அருமை
    விளக்கங்களும் அருமை.
    இன்பம் நமக்குள்ளேதான் இருக்கிறது.
    இருந்தாலும் அதை வெளியில் தேடுவதும் ஒரு இன்பம்தான்.

    reply to this comment Wednesday, 11.03.09, 16:00:19
  8. [8] from: பாரதிய நவீன இள

    அருமையான பதிவு.
    பயண அனுபவங்களையும், பண்டரீபுரம் பற்றிய வரலாற்றுக் குறிப்பையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    reply to this comment Friday, 13.03.09, 10:19:56
  9. [9] from: Priya

    Enjoyed reading the post.
    Thanks for sharing this pilgrimage/travelogue.

    reply to this comment Friday, 20.03.09, 13:47:20
  10. [10] from: venkat

    nice desikan. I like the undercurrent of humour in all your articles, including the above one.
    You keep reminding Sujata through your writings.

    Keep writing

    reply to this comment Friday, 10.04.09, 21:52:43
  11. [11] from: பழூர் கார்த்தி

    பண்டரிபுரம் டிரிப் நல்லா இருந்தது.. ஜீப் பயணிகள் போட்டோவை எப்படி எடுத்தீர்கள், டாக்சியில் போகும்போதே எடுத்ததா??

    reply to this comment Saturday, 25.04.09, 21:52:22
  12. [12] from: Desikan

    ஆமாம். குலுங்கிக்கொண்டு போன காரிலிரிந்து கையை வெளியே நீட்டி எடுத்தது.படம் வந்த பிறகு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நன்றி

    reply to this comment Sunday, 26.04.09, 06:39:09
  13. [13] from: துளசி கோபால்

    அருமையோ அருமை.

    படங்கள் பிரமாதம்.

    reply to this comment Sunday, 26.04.09, 07:24:21
  14. [14] from: Vijayashankar

    My uncles (Kannada Devangas) have Pandaripuram diety as their Kula theivam. They go there from Tirupur once a year for special pooja, all the way by a lorry with 50+ people in it!

    reply to this comment Sunday, 05.07.09, 21:17:42
  15. [15] from: SRIDHAAR.R

    hai desikanji,
    i am very much impressd in your valuable photos,can you brief me any decent lodege at pandaripuram,pl advice sothat i can able to stay and have a nice darshan of lord pandurangan

    reply to this comment
    1. this comment inspired Desikan — #16
    Wednesday, 18.11.09, 19:51:08
  16. [16] from: Desikan

    inspired by SRIDHAAR.R — #15 Hotel Tripursundari in Solapur, Ph# 02172312856. Near the temple nothing is good as far as I know.

    reply to this comment
    1. this comment inspired SRIDHAAR.R — #17
    Friday, 20.11.09, 16:01:40
  17. [17] from: SRIDHAAR.R

    inspired by Desikan — #16 THANKYOU FOR YOUR KIND INFORMATION SIR.

    reply to this comment Friday, 27.11.09, 22:29:55

Comment Info:

If you like, you may use the following semi-tags in your comments:

Add new comment:

Comments must be approved before being published. Thank you!