Desikan
சுஜாதா, புத்தக/கேசட் கண்காட்சி
குடியரசு தினத்திற்கு சில நாள்கள் முன் ஒரு காலையில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. சுஜாதா
"தேசிகன், சாருக்கு உடம்பு சரியில்லை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஐ.சியூவில் இருக்கார்."
"மாமி என்ன ஆச்சு?"
"புத்தகக் கண்காட்சி, சிவாஜி திரைப்பட விழாவுக்கெல்லாம் போனதா என்னன்னு தெரியலை, நிமோனியா வந்து, அதுக்கு சாப்பிட்ட மாத்திரைனால கிட்னி affect ஆகி, இப்ப மூச்சுச் திணறல் வந்து ஆக்ஸிஜன் வெச்சிருக்காங்க"
"யார் பாத்துக்கரா?"
"யாருக்கும் தெரியாதுப்பா. ஏதோ உன்கிட்ட சொல்லணும்னு தோணித்து, சொன்னேன், அவர் தம்பிக்குக் கூட தெரியாது"
அந்த வாரம் சென்னை சென்று அவரை அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யுவில் பார்த்தேன். உடம்பு மெலிந்து, குழந்தை போல இருந்தார். குழந்தை மாதிரியே பேசினார்.
"என்ன தேசிகன் எப்படி இருக்க. இப்ப என்ன கிறுஸ்துமஸ் லீவா ?"
"சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்"
"ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான் என் நண்பன், பாட்டு கேட்கிறேன். காலையில் பக்திப் பாட்டெல்லாம் வைக்கிறாங்க. ஆனா இந்த ஹெட் ஃபோன் தான் உறுத்துது. அந்த கேபிள் லென்த் பொறலை. காட்லெஸ் ஹெட் போன் எங்க கிடைக்கும் ?"
"இங்க சென்னைலயே கிடைக்கும், கிடைச்சா வாங்கி அனுப்பறேன்"
"காலையில பேப்பர் படிக்கிறேன், ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு வந்த போது என்ன ஹெட்லைன்ஸ் இருந்ததோ அதே தான் இப்ப இருக்கு, ஒண்ணும் மாறலை" என்றார். நான் புன்னகை செய்தேன்.
"சீக்கரம் வெளியே வாங்க இன்னொரு டிரிப் ஸ்ரீரங்கம் போகலாம்" என்றேன். முகம் மலர்ந்தது. "கட்டாயம் போகலாம்," என்றார் தன்னம்பிக்கையுடன்.
<>
டிசம்பர்-ஜனவரி மாதம் என்றாலே இரண்டு இடங்களுக்குப் போவது பிடிக்கும். ஒன்று புத்தகக் கண்காட்சி, மற்றொன்று சங்கரா ஹாலில் நடக்கும் கேசட் கண்காட்சி. நிறைய கர்நாடக சங்கீதம் சம்பந்தமான கேசட்கள் இங்கே கிடைக்கும். சில சமயம் தெரிந்த பாடல்களை(துன்பம் நேர்கையில், கிருஷ்ணா நீ பேகனே, தீராத விளையாட்டு பிள்ளை... ) யாராவது பாடியிருந்தால் போனதற்காக ஒன்றிரண்டு வாங்குவேன். இந்த முறை சென்ற போது, நல்ல கூட்டம். அட இவ்வளவு பேர் சங்கீதம் கேட்க்கிறார்களா என்று உள்ளே போனால், மோசர் பேர், மற்றும் சில கம்பெனிகள் ரூபாய்க்கு இரண்டு படம் என்று விற்றுக்கொண்டிருந்தது தான் காரணம் என்று புரிந்தது. கேசட் கண்காட்சி கல்கட்டா சாட் கடை போல் ஆகியிருந்தது.
மோசர் பேர் டிவிடி 34 ரூபாய் என்றால், ராஜ் டிவி 27க்கு தருகிறார்கள்; மாடர்ன் சினிமா கம்பெனி 25 ரூபாய்க்கு என்று போட்டோ போட்டி. இன்னொரு கம்பெனி, இரண்டு சினிமா உள்ள டிவிடியை 45 ரூபாய்க்குத் தருகிறார்கள். ( இதில் 10% தள்ளுபடி வேறு). ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று தமிழ் மக்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. ஒரு வயதான மாமி, மாமா தன் அமெரிக்காவிலிருந்து மகன்/மகள் அனுப்பிய ஈ-மெயிலை அங்கவஸ்திரம் மாதிரி வைத்துக்கொண்டு, சார் சாமி படம் எங்கு கிடைக்கும், கவுண்டமணி செந்தில் காமெடி எங்கே கிடைக்கும் என்று அலைந்துகொண்டிருந்தார். மற்றொருவர் திருமால் பெருமை, திருவிளையாடல் போன்றவற்றைத் தேடிக்கொண்டிருந்தார். நான் விசாகா ஹரியின் சீதா கல்யாணம் வாங்கினேன். இன்னும் பார்க்கவில்லை.
ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நதிக்குப் போகும் வழியில் 'ஐந்து குழி மூணு வாசல்' இருக்கும். அதே போல் இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஆறு கவுண்டர் ஆறு வாசல். போன வருடம் மாதிரி தான் இந்த வருடமும், நிறைய புத்தகங்கள் இருந்தன. இந்த மாதிரி புத்தகக் கண்காட்சியில் தான் நண்பர்களை சந்திக்க முடிகிறது. இந்த முறை பத்ரி, பா.ராகவன்(கிழக்கு), ஹரன் பிரசன்னா(எனி இந்தியன்), சரவணன்(வானதி) உமா மகேஸ்வரன் ஆகியோரை சந்திக்க முடிந்தது. இவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த முறை ஒரே மாதிரியான புத்தகம் நிறைய வந்திருந்ததை கவனிக்க முடிந்தது. (உதாரணம்: சச்சின் பற்றிய புத்தகம் நிறைய வந்திருந்தது. தலைப்பு, "ஒரு சுனாமியின் வரலாறு" ). கம்பராமாயணத்தில் வரும் பெயர்களைத் தொகுத்து வர்தமானன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் ஒன்றை வாங்கினேன். மனைவிக்கு லிப்கோவில் ஸகல காரிய ஸித்தியும் ராமாயணம் புத்தகம் வாங்கினேன்.
இந்த பதிவை எழுதும் சமயம் சுஜாதா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். அவருடன் சற்று நேரம் தொலைப் பேசினேன். சோர்வாக இருக்கிறார், ஆனால் நலமாக இருக்கிறார்.
11:08:21 - Tuesday, 05.02.08 - தேசிகன் - 5175x -
Permalink
Karma points: 11. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search சுஜாதா புத்தககேசட் கண்காட்சி
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









அண்ணா,
வாத்தியார் இப்ப எப்படியிருக்கிறார்.
பாதி சொல்லிட்டு பாதி நிறுத்தாதீங்கள்.
reply to this comment- this comment inspired Desikan — #3
Tuesday, 05.02.08, 11:58:46வாத்தியார் நன்றாக தேறி உடல்நலத்துடன், ஷங்கர், மணிரத்னத்திற்கு வகையறாக்கு அல்லாமல் தமிழ் இலக்கியத்திற்கு சேவை செய்ய திரும்ப எல்லாம் வல்ல இயற்கையை பிராத்திக்கிறேன்.
- SURESH KANNAN
reply to this comment- this comment inspired Desikan — #3
Tuesday, 05.02.08, 12:09:52inspired by Mohandoss Ilangovan — #1 தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கேன். உங்க கமெண்ட் பார்த்தவுடன், சுஜாதாவுடன் பேசினேன். நலமாக உள்ளார் ஆனால் கொஞ்சம் சோர்வாக இருக்கிறார். இந்த வாரம் முடிந்தால் அவரை போய் பார்ப்பேன்.
reply to this comment Tuesday, 05.02.08, 12:15:52inspired by suresh kannan — #2 சுரேஷ் கண்ணன் நீங்கள் சொல்லுவது சரி. அவரிடமும் இதையே சொல்லியிருக்கேன்.
சுஜாதா பலகாலம் வாழ்ந்து நிறைய கற்று, நிறைய பெறவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்த்துகிறேன்.
reply to this comment Tuesday, 05.02.08, 12:23:45சுஜாதா அவர்கள் விரைவில் நலம் பெறட்டும்.
reply to this comment Tuesday, 05.02.08, 14:18:57சீதைக்கு கல்யாணம் ஆயாச்சா?
reply to this comment Tuesday, 05.02.08, 15:47:17அவர் விரைவில் உடல் நலம் தேறி நிறைய எழுதவேண்டும்...
///சுரேஷ் கண்ணன் நீங்கள் சொல்லுவது சரி. அவரிடமும் இதையே சொல்லியிருக்கேன்.///
குட் !!!!!!!!!!!!!!!
reply to this comment Tuesday, 05.02.08, 15:56:35பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல்:
இந்துமதம் எங்கே போகிறது ( தாத்தாச்சாரியார், நக்கீரன் பதிப்பகம்) படித்தேன்...அதில் திருப்பதி பெருமாள் அல்ல, காளி தேவி என்றும் அந்த விக்கிரகத்தில் பின்புறம் சடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்றும், அதனால் தான் சங்கு / சக்கரம் தோளில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருக்கிறாரே...அதுவும் அவரே நேரில் பார்த்ததாக...அடுத்த வாரம் போவதாக ப்ளான்...(ட்ரைவர்!!) இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
reply to this comment- this comment inspired Desikan — #11
Tuesday, 05.02.08, 15:59:13//உடம்பு மெலிந்து, குழந்தை போல இருந்தார். குழந்தை மாதிரியே பேசினார்.//
அவரே எழுதியது போல்... அவர் நல்லபடியாக உடல்நலம் தேறி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திப்போம். அவரை ஒரே ஒரு முறைதான் நேரில் சந்திக்க வாய்ப்பு வாய்த்தது. அப்பொழுதும் ஒன்றும் பேசத் தெரியவில்லை.
//கேசட் கண்காட்சி கல்கட்டா சாட் கடை போல் ஆகியிருந்தது//
)
reply to this comment Tuesday, 05.02.08, 18:38:19sujatha-vai patri, avar thaeriyullaar ena arindhathil sandhosham. avar viraivil poorana gunamaahi , sandhoshamaaha innum ezhudhi thalla sriranga perumaanai pirarthikkiraen.
reply to this comment Tuesday, 05.02.08, 21:44:42inspired by செந்தழல் ரவி — #8 எனக்கு தெரிந்த திருப்பதி பெருமாள்
தாழ்சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன் நாணும் தோன்றுமாம்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலையே எந்தைக்கு
இரண்டு உருவம் ஒன்றாய் இயைந்து.
இதில் பேயாழ்வார் தாழ்ந்த சடையும் நீண்ட முடியும் மழுவும் சக்கரமும் பாம்பும் பொன் நாணும் திருமலையில் காட்சி தரும் எந்தையின் இரண்டு உருவங்களின் அம்சங்கள் என்கிறார்.
"பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே வாச மலர்த்துழாய்மார்பன்" என்கிறார் பேயாழ்வார். அதாவது அவனுக்கு உவமை இல்லை என்று சொல்லாமல் அவனுக்கு உவமை அவன் மட்டும்தான் என்கிறார்.
தாத்தாச்சாரியார் போன்றவர்களின் புத்தகங்களை பார்க்கும் போது, 'இந்துமதம் எங்கே போகிறது?" என்று கேட்கவைக்கிறது.
reply to this comment Wednesday, 06.02.08, 11:17:37Desikan,
Hope Sir is ok now. We pray for his good health. and thanks for your post.
anbudan
reply to this comment Wednesday, 06.02.08, 11:50:11Athiyaman
avaru seekiram gunamavru , iravan irukaar.
reply to this comment Wednesday, 06.02.08, 15:03:19manam patharum indha neraththil, avar purana gunam adaiya kadavulai vendugiren.nanri desikan.
reply to this comment Wednesday, 06.02.08, 17:30:54Desikan,
I pray for Sujatha health and his Speedy recovery.
reply to this comment Thursday, 07.02.08, 12:03:26When I went to Shankara hall at the time of Pongal its too much crowd.
Even , I bought Seetha Kalyanam and Sundara Kandam CDs by Vishaka Hari.
Desikan, now I am in US. I took those CDs with me here.
சுஜாதா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுதியில் இருந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் பலருக்கு இன்றளவும் தெரியாது. அவர்களுள் நானும் ஒருவன். எங்கள் வீட்டு வாசலில் காரைநிறுத்திவிட்டு, அவரும், கனிமொழியும், அரவிந்தனும், அவர்கள் புதல்வன் ஆதித்யாவும் அருகிலிருந்த நண்பர் இல்லத்திற்குச் சென்று திரும்பும்போது காத்திருந்து எங்கள் வீட்டுக்கு அழைத்தபோது, முன்பின் தெரியாத என் வீட்டிற்கு வந்து கனிவுடன் உரையாடிச் சென்ற நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது.
reply to this comment Thursday, 07.02.08, 15:40:19அவர் பூரண நலன் பெற்று தன் பணியைத் தொடர்ந்து செய்ய இறைவன் அருள் புரிவானாக!
அவர் அவ்வப்போது மருத்துவத் துறையின் ஹைடெக் சாதனைகளையும் ஹைடெக் பின்னணியில் அடிக்கப்படும் கொள்ளைகளையும் அனுபவ பூர்வமாக உணர்ந்து எழுதுவதற்காக ஐசியூ போய்ப் படுத்துக் கொள்வார். எல்லோரையும் பதற வைத்து விட்டுக் குழந்தைச் சிரிப்புடன் எழுந்து வருவார்.
சீக்கிரம் வாங்க சார்.
அன்புடன்,
RATHNESH
reply to this comment Friday, 08.02.08, 10:36:33Desikan,
My prayers for his speeday and full recovery !
No response for my email from you ????
Pl. call (without fail) when you visit chennai.
reply to this comment Friday, 08.02.08, 10:52:19//"என்ன தேசிகன் எப்படி இருக்க. இப்ப என்ன கிறுஸ்துமஸ் லீவா ?"
"சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்"
"ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. //
இவர் வைத்தியம் பார்த்தது, அப்ப்ல்லோ தானே அல்லது காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி மருத்துவமனைகளா அப்பல்லோ ICU வில் இருந்தால் எல்லா நாளேடுகளூம் கிடைக்கும்
reply to this comment Friday, 08.02.08, 17:25:05Hello Desikan Sir,
how is sir now. I am very happy to see him back in anantha vikatan. I pray for his good health. god blesss him
reply to this comment Saturday, 09.02.08, 18:51:12We are very happy to know Sujatha Sir is back from the hospital and recuperating. May the Lord give him good health and a long life .
reply to this comment Friday, 15.02.08, 20:12:01sorry about this bad news
Writer sujatha passed away tonight at 2122(IST)(27th February) at Apollo Hospital.
He was hospitalised for some time now.
Let us pray god that his soul rests in peace and his works obviously will live for ever.
Dindi
reply to this comment Wednesday, 27.02.08, 21:30:43ரொம்ப வருத்தமாக இருக்கு தேசிகன். உங்களுக்கு மனத்திடத்தைப் பெருமாள் கொடுக்கட்டும்.
reply to this comment Thursday, 28.02.08, 09:06:19Avar kalamaitar yenru ninaikamal avar avarudaiya puthagangal mulamaka namidaye ullar.
Analum avar ezhapai thankikolla mudiyavillai.
reply to this comment Thursday, 28.02.08, 17:35:11His works will live for ever. Pray to god that his soul rests in peace. It may take centuries to get a writer like him .
reply to this comment Thursday, 28.02.08, 19:01:22Fist thing I read in kumudam, kunkuman and AV is Sujata's section. His works will live for ever. No doubt.
reply to this comment Friday, 29.02.08, 12:33:54We will miss Sujatha sir for ever. I have always earnestly wished a very long life for him and Dr. Kalam. But it is unfortunate that he is no more. Hailing from Srirangam, I have felt very close to his writings. Sir, we do not know how we will cope up and come out. We pray to Lord Ranganatha and Thayar to bless your soul.
reply to this comment Friday, 29.02.08, 16:46:18We will miss Sujatha sir for ever. I have always earnestly wished a very long life for him and Dr. Kalam. But it is unfortunate that he is no more. Hailing from Srirangam, I have felt very close to his writings. Sir, we do not know how we will cope up and come out. We pray to Lord Ranganatha and Thayar to bless your soul.
reply to this comment Friday, 29.02.08, 16:46:22Really it was so difficult to come to terms with demise of our beloved writer.It's been so painful. I've no words to say/write more..
reply to this comment Saturday, 01.03.08, 17:29:33