Desikan

  • Back to Main page

இங்க் பேனா

null

தீபாவளிக்கு சென்னைக்குச் சென்ற போது பட்டாசுச் சத்தத்தின் மத்தியில் விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? *) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்தரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

Camlin

திருச்சி கண்டோன்மெண்ட் கோர்ட்டில் மரத்தடித் தாத்தா, தடியாகக் கட்டை பேனா விற்பார். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகபடுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளாவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

Bril

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோக படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்விஸ் செய்ய வேண்டும்.
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிரண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

Nip

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப் பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப் பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

 

Drop of Ink

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பிசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பிஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாயல்ட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது. அடுத்த சில நாள்களில் காணாமல் போனது. எனக்கு என் பக்கத்துவீட்டு நண்பன் மேல் தான் சந்தேகமாக இருந்தது. ஆனால் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு பின் அவர்கள் வேறு வீட்டுக்கு காலிசெய்து கொண்டு போனார்கள். ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து ஜன்னல் வழியாக அவர்களின் பூட்டிய வீட்டுக்குள் போனது, சுவர் ஏறிக் குதித்து உள்ளே போனபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த பித்தளை பேனா உள்ளே இருந்தது.

இன்று அந்தப் பேனா என்னிடம் பத்திரமாக இருக்கிறது; ஆனால் இங்க் பேனாவை தொலைத்துவிட்டோம். 

* ஒரு பாட்டில் பிரில் இங்க் விலை 12/= ரூபாய்.

Desikan - clock 13:50:09 - Wednesday, 14.11.07 - தேசிகன் - 3000x - pencil Permalink
Karma points: 5. Do you like this article? [Thumbs upthumbs-up - Thumbs upthumbs-down]

RSS 2.0 feed, Trackback, print preview, email this article

  • RSS 2.0 feed of this article, including comments: RSS 2.0 comments feed
  • You can [print] this article, [email] it, or export a [PDF].

Google search

No results found or search not configured.

Comments:

  1. [1] from: Haranprasanna

    ஸ்ரீ பேனா புராணம். :)

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    2. this comment inspired Raghunathan — #35
    Wednesday, 14.11.07, 14:48:22
  2. [2] from: M.Rajkumar

    dear Desikan,
    Nalama? I enjoyed this article.
    Have you seen"Kattrathu Tamil". there is one dialouge about Jeeva writing using ink pen.
    Nanri
    Anbudan

    Rajkumar

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Wednesday, 14.11.07, 15:10:59
  3. [3] from: karthick

    penai parriye oru post great pa

    namma jodi no 1 , property round mari property post a:)

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Wednesday, 14.11.07, 16:43:31
  4. [4] from: Mathivanan

    Nice. Your thinking and flow are excellent. We all have experienced this in the past. You have made me rollect the past! Thanks.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Thursday, 15.11.07, 17:18:38
  5. [5] from: sureshkannan

    very nice. :-) I will this ink.... oops.. sorry link to my friend.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Thursday, 15.11.07, 18:32:36
  6. [6] from: நாகு

    ஒழுகும் பேனாவை சரி பண்ணும் டெக்னாலஜியை விட்டு விட்டீர்களே? மரையில் நூல் சுற்றுவதிலிருந்து க்ரீஸ் தடவுவது வரை ஒழுகுவதை நிறுத்த ஒரு ஆராய்ச்சி நூலே எழுதலாம். நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் இஞ்சின் ட்ரைவரிடம் க்ரீஸ் வாங்கி வருவோம்.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Thursday, 15.11.07, 18:46:25
  7. [7] from: செந்தழல் ரவி

    நூல் சுற்றுவதில் இருந்து, புறமுதுகில் இங்க் அடிப்பதுவரை ஆல்ரவுண்டாக எழுதி பட்டையை கிளப்பி இருக்கீங்க...

    பள்ளிக்கூடத்துக்கே போய் வந்த உணர்வு...!!!!!!

    (ஏப்ரல் ஒன்று அன்று இங்க் பேனா மற்றும் உருளைக்கிழங்கின் அரைபாகம் மிகவும் உபயோகப்படும்)

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Thursday, 15.11.07, 20:42:13
  8. [8] from: T.R.CHANDRASEKARAN

    நான் எழுதிய பேனாக்கள்
    காக்கை இறகு பேனா
    கட்டை பேனா
    இங்க் பேனா(ரைட்டர்,பைலட்) விலை ரூ1.50
    பால் பாயின்ட் பேனா
    பேனாவீன் கவரை தொலைத்த அனுபவம் தனி

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Friday, 16.11.07, 11:00:17
  9. [9] from: அருண்

    நல்ல பதிவு தேசிகன்.
    ஏன் நீங்கள் இன்னும் கொஞ்சம் frequent ஆக பதிவுகள் போட கூடாது?

    reply to this comment
    1. this comment inspired Desikan — #10
    Friday, 16.11.07, 21:58:10
  10. [10] from: Desikan

    inspired by Haranprasanna — #1 :-)
    inspired by M.Rajkumar — #2 inspired by karthick — #3 inspired by sureshkannan — #5 inspired by செந்தழல் ரவி — #7 நன்றி
    inspired by Mathivanan — #4 பழைய விஷயங்களை நினைத்து பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம்.
    inspired by நாகு — #6 ஆமாம், இன்னும் நிறைய எழுதி வைத்தேன். கட்டுரை ரொம்ம நீளமாக போகுதே என்று சுருக்கிவிட்டேன் :-)
    inspired by T.R.CHANDRASEKARAN — #8 இறகு பேனாவில் எழுதிய அனுபவம் எனக்கு இல்லை :-) . பழைய படங்களில் பிரிட்டிஷ் காரர்கள் எழுதுவதை பார்த்திருக்கிறேன் அவ்வளவே!
    inspired by அருண் — #9 அருண் நிறைய எழுதனும் என்று தான் ஆசை, ஆனால் முடிவதில்லை. முயற்சி செய்கிறேன்.

    reply to this comment Saturday, 17.11.07, 09:42:24
  11. [11] from: வாசன்

    இங்க் பதிவு நல்லாயிருக்கு தேசிகன்.

    இங்க் - இங்க் மற்றும் இந்திய நினைவுகளை கிளப்பி விட்டு விட்டது !! மாட்டிகிட்டீங்க!!

    ப்ரில் இங்க் - ன் தஞ்சை மாவட்ட விநியோக்ஸ்தர்(தமிழ்?) அல்லது பிரபல படுத்துபவர்(?)நான் வசித்திருந்த சீர்காழி/தென்பாதி - சர்வமான்யத் தெருவிலிருக்கும் ஒரு வீட்டிற்கு மாதம் இருமுறை என வருவார். சரியான நேரத்தில் அவர் முகம் பார்த்து வழிந்தால், வழியும் சிறார்களுக்கு இலவச இங்க் ஃபில்லர்களும், எழுதும் காகிதங்களும் கிடைக்கும் ( miniature letter pads!) ..

    இங்க் ஃபில்லர் மாதிரி அற்புதமான விஷயம் உலகத்திலிருந்ததில்லை..

    மெய்சிலிர்த்து போகலாம் எனது இங்க் ஃபில்லர் நினைவுகளை முழுமையாக கிளற முடிந்தால்..

    மிக்க நன்றி.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Saturday, 17.11.07, 10:23:04
  12. [12] from: dharumi

    தங்க நிப் அப்டின்னு சொல்லி, பத்திரமா வச்சுக்கோன்னு அப்பா கொடுத்த swan பேனா ரொம்ப பட்டையடிக்கும். ஆனால் டெஸ்க்கில குத்திட்டு மறுபடி எழுதினாகூட எழுதும். அப்பா வச்சிருந்த waterman பேனா இப்போ இருந்தா அதன் மதிப்பு எவ்வளாவாயிருந்திருக்கும்? அந்தப் ப்ரெள்ன் கலர் பேனா மேல தான் ரொம்ப நாள் எனக்கு கண். இன்னொரு பேனா அப்பாட்ட இருந்தது. அதில் க்ளிப் பெருசா நடுவில சதுர இடைவெளியோடு இருக்கும். அதில என் சின்னப் பிள்ளை போட்டோ ஒண்ணை அப்பா கொஞ்ச நாள் வச்சிருந்தாராம்; சொன்னார்; நம்பிக்கொண்டேன்.

    இப்போ மூணு cross பால்பாய்ண்ட் பேனா பத்திரமா அலமாரியில் தூங்குது.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Saturday, 17.11.07, 11:17:36
  13. [13] from: வராகி

    தேசிகன்,
    என் மனதில் உள்ள பழைய எண்ணங்களை அப்படியே வடித்தது போல் உள்ளது , நன்றி
    - வராகி

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Saturday, 17.11.07, 13:34:05
  14. [14] from: u.sundaram

    'வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிரண்ட் இங்க்கை உபயோகப்படுத்த மாட்டார்கள்'

    vadakalai-adiga-nal use panniya nib-i pol nuni-valainthu iruppadhalo?

    Thenkalai-pudiya pena nib-i pol sharp -aga irupadho ?

    Long time no see.BTW a good nostalgic post..
    if time permits & seen the movie,u can post ur views on 'Kattradhu Tamil'
    sundaram.u

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Sunday, 18.11.07, 12:57:39
  15. [15] from: enRenRum anbudan BALA

    Desikan,
    Nostalgia is always good ! As usual, your UNIQUE presentation style makes the post an excellent reading.

    According to me, this is one of your best posts !

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Monday, 19.11.07, 13:06:58
  16. [16] from: துளசி கோபால்

    அருமை தேசிகன்.

    இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

    http://www.desipundit.com/category/tamil/...

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Tuesday, 20.11.07, 07:56:44
  17. [17] from: sathish

    Hello Desikan,

    Nice to read ur article after a longtime. Ur writing style is simple and always excellent. This article reminded me about my school days. I will forget to fill the ink everyday and I used to borrow 2 or 3 drops of ink from my friends. Sometimes I used paper or thread on the pen to prevent the ink from leaking or spilling on my fingers. It will leave a round mark in my pocket whenever my pen leaks. My friend used a "Hero Pen" and he was the hero for our class.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Tuesday, 20.11.07, 19:14:54
  18. [18] from: சீனா

    மலரும் நினைவுகள் - அருமை - அக்காலத்தில் பேனா உபயோகித்ததை மறக்க முடியுமா - எப்பொழுதும் கைவிரலில் மை - சட்டைப் பையில் மை - ஒழுகுவதை நிறுத்துவதற்கு எத்தனை வைத்தியம். அபூர்வமாக் ரைட்டரிலிருந்து ஹீரோ - laurel Rose - அருமையான வண்ணம். கருப்புக்கு அடுத்த படியாக உப்யோகித்த வண்ணம்.
    ம்ம்ம்ம் - காலங்கள் மாறுகின்றன.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Wednesday, 21.11.07, 05:52:45
  19. [19] from: பிச்சை ராகவன்

    நான் கூற நினைப்பததல்லாம் !! நீங்கள் கூறிவிட்டீர்கள் -
    இருந்தாலும வாங்கிய புதிதில் எழுதவில்லை என்றதால், நண்பர்களின் ஆலோசனைப்படி கொதிக்கும் வெந்நீரில் போட்டு
    ஊற வைத்து எடுத்ததில் ம றை லூசாகி (பேனாவிற்க்கு !) , புத்தூர் கட்டுபோட்டு, நிப்பிற்ற்கு அடியில் இருக்கும் கட்டை உருமாறி -
    ஒரே அல்லொகலம்தான்.
    அதானால் சட்டைப் பையிலும், நெஞ்ஞிலும் என்றுமே
    போகாத இங்க் கறை - இதனால் பேனாவை
    'வெற்றி கப்'' பைப்போல் வலது கையில் தூக்கி பிடித்த து நடந்த
    ஒரு வருட காலமும் உண்டு. ப்ணக்கர பையன்கள் watermaan இங்க்தான் என்று பீத்திக்கொள்ளும் பொழுது ஓரு ஏக்கம் உண்டாகும்
    அன்புடன்

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Wednesday, 21.11.07, 06:50:11
  20. [20] from: nmraman

    mai pena nenaivugal....naan kaalathil pinnokki pokiren....ohhhhh...anthanaal ninaivugal...oru gundu navy pena and oru swan pena....vaithiruppatharke perumaiyaga irrukkum....kan pol vaithukkolvom antha natkalil...sunday vanthaal, pena cleaning day thaan....penavai thirappathu, yella partskalaiyum pirithu tanniyil uravaithu, thuniyal thudaithhu, kayavaithu,,pin assembly seithu ink utri thayaar seivathu,,,,ohhhh, yenna inbam...marakkamudiyathuuu....
    .Desikan, reminishing old thoughts is always enjoyable...thanx...

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Thursday, 22.11.07, 12:57:21
  21. [21] from: Sambar Vadai

    Desikan,

    good post.

    you are invited
    http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html...

    thanks in advance.

    I could not get into this page till now for past few days.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Friday, 23.11.07, 16:56:36
  22. [22] from: Raghavan

    Desikan -
    Nice blog after a long time. Heavy nostalgia. Anyways it is, as you said, a pleasing experience.

    This does not stop with ink pen alone. There are quite a few things that can inspire nostalgic writing:
    * geometry box
    * exam pad and its changes
    * the cycle we first got to go to school
    * mathematics note book - remeber we used to open sideways it will be white with two red lines - one side for rough work - the wider right side, one is margin - the left side and the middle one for the sums!

    Hmmm! Lots and lots. Also remember the "doses" we get from father especially when we mess up the pen and the bril ink bottle!! Also the first time we were presented with PILOT, GAMMA, HERO progressively - I liked GAMMA pens the best - smooth writings - used to be manufactured by GEM PENS T-NAGAR!!!

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Wednesday, 28.11.07, 20:31:47
  23. [23] from: பிச்சை ராகவன்

    மலரும் நினைவுகள்
    composite maths புக்கை கணக்கு போட பிரட்டும் பொழுது,
    முதலில் பார்ப்பது கடைசியில் இருக்கும் answer பக்கம் தான்.
    அதன் பிறகுதான் கணக்ககை போடுவது .

    thanks to Sri Raghavan (22)

    reply to this comment Friday, 07.12.07, 21:35:18
  24. [24] from: Chellam Mathiarasan

    Dear Desikan,

    What a long gap ???

    Chellam Mathiarasan
    Singai

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Saturday, 08.12.07, 11:13:27
  25. [25] from: Surveysan

    இந்த மாதிரியெல்லாம் எனக்கு எழுதவே தோணமாட்றதே, என்ன பண்றது?

    இதெல்லாம் அதா வரதுதான் இல்ல?

    சூப்பர்ப் ரைட்டிங்!

    enjoyed every line of it :)

    பேனா லீக் ஆகாம இருக்க, மெழுகுவத்தி தேச்சுப்போம். ஹ்ம்ம். அந்த நாள் ஞாபகம். :)
    இங்கில் இருந்து reynoldsக்கு மாறிய காலம் என் காலம் ;)

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Saturday, 08.12.07, 23:07:51
  26. [26] from: புருனோ

    நான் இன்னமும் இங்க் பேனா தான் உபயோகிக்கின்றேன்.

    ஒரு பாட்டில் இங்கின் விலை ரூயாஇ 14 மட்டுமே

    reply to this comment
    1. this comment inspired Desikan — #27
    Sunday, 09.12.07, 00:18:50
  27. [27] from: Desikan

    inspired by வாசன் — #11 தகவலுக்கு நன்றி.
    inspired by dharumi — #12 சுவாரசியமாக இருந்தது.
    inspired by வராகி — #13 பழைய நினைவுகள் எல்லாம் இந்த மாதிரி தான் இருக்கும் :-)
    inspired by u.sundaram — #14 நன்றி
    inspired by enRenRum anbudan BALA — #15 பாலா நன்றி. உங்க நட்சத்திர வார பதிவுகளை இன்னும் படிக்கவில்லை.
    inspired by துளசி கோபால் — #16 மிக்க நன்றி
    inspired by sathish — #17 inspired by சீனா — #18 inspired by பிச்சை ராகவன் — #19 inspired by nmraman — #20 நன்றி
    inspired by Sambar Vadai — #21 நான் கடைசியாக பார்த்த படம் சிவாஜி. அதுக்கு முன்னாடி என்ன என்று ஞாபகம் இல்லை..
    inspired by Raghavan — #22 ஆமாம். நிறைய விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம்.
    inspired by Chellam Mathiarasan — #24 பர்சனாலாக ஏகபட்ட வேலை அதனால் தான் இந்த இடைவேளை. வாரம் ஒரு பதிவு போட முயற்சிக்கிறேன். நன்றி.
    inspired by Surveysan — #25 என்ன எழுதுவது என்று தெரியாமல் இதை எழுதினேன். அவ்வளவு தான்.
    inspired by புருனோ — #26 அட நானும் இப்ப இங்க் பேனா தான் உபயோகிக்கிறேன்!

    reply to this comment Tuesday, 11.12.07, 12:29:46
  28. [28] from: நட்ராஜன்

    தேசிகன் சார். என்ன மார்கழி ஆரம்பிச்சாச்சு. திருப்பாவை எங்கே ?
    அன்புடன்
    நடராஜன்

    reply to this comment Tuesday, 18.12.07, 19:01:42
  29. [29] from: Rengaraja Narayanan

    good post... i like it ..thanks ..we are also remembering our old days

    reply to this comment Thursday, 20.12.07, 00:45:05
  30. [30] from: venkat

    Desikan,
    Kalakittinga..Oru 15-20 years thirumibi pakka vachitinga. Reynolds ballpoint pen introduce anathu...Inp pen yellam maranthu poyachu!!!
    Puthandu vazhthukkal!!

    thanks,
    venkat

    reply to this comment Monday, 24.12.07, 09:26:48
  31. [31] from: பழூர் கார்த்தி

    உங்க பேனா நினைவுகள் அருமையா இருக்குங்க தேசிகன், எவ்ளோ பேனா இருந்தாலும் எனக்கு பிடித்ததென்னவோ ஹீரோ பேனாதான்..
    இப்போதெல்லாம் அடிக்கடி பெங்களூர் வந்து செல்கிறேன், எப்பொழுதாவது சந்திப்போம்!!

    reply to this comment Monday, 24.12.07, 19:27:11
  32. [32] from: Chennai Tiger

    Nalla Katturai. Arumai

    reply to this comment
    1. this comment inspired raams — #34
    Tuesday, 25.12.07, 04:39:04
  33. [33] from: raams

    ennidan oru fountain pen irukkirathu, eppavathu athil ezhuthuven

    reply to this comment Wednesday, 26.12.07, 15:46:08
  34. [34] from: raams

    inspired by Chennai Tiger — #32 aama nalla katturai
    20 varusham thirumbi parkka vachthu
    romba nantri

    reply to this comment Wednesday, 26.12.07, 15:48:36
  35. [35] from: Raghunathan

    inspired by Haranprasanna — #1 The article about the ink pen is very pleasant to read and no doubt, the impact of Sujatha is very evident - it is a credit according to me. during my days which are 34 years ago(!), ball pens are banned and the school teacher who always wanders around with a pirambu, will ostracise the boy who uses ball pen! I know of one MB ganesh who fought with his english teacher for reducing 3 marks because he used a ball pen!! MB Ganesh was a gladiator in our eyes in those days!!

    Our science teacher,TRS who was for some unknown reason nicknamed as "krishnaoil" was a big hater of ball pen and his really beautiful hand writing, he claimed , was due to the use of ink pens!

    congratulations desikan, for evoking our own memories of ink oen!

    reply to this comment Sunday, 30.12.07, 16:11:00
  36. [36] from: அருண்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
    இந்த புத்தாண்டில் நீங்கள் மேலும் மேலும் நல்ல பல பதிவுகளை போட வாழ்த்துகள் மற்றும் வேண்டுகோள்.

    reply to this comment Monday, 31.12.07, 11:39:32
  37. [37] from: Sivamurugan

    Good one

    reply to this comment Friday, 04.01.08, 16:39:33
  38. [38] from: pradeepa

    Good one...keep going

    reply to this comment Thursday, 17.01.08, 14:44:48
  39. [39] from: krishnan

    தேசிகன் சார், நாங்கள் படிக்க ஆரம்பிச்ச போது, வெறும் பென்சில் தான். அதிலிருந்து பேனா மாறுவதற்கு நாங்கள் பட்ட பாடு! ஆனால், வருஷம் பல இடைவெளி இருந்தாலும், பேனா ரிப்பேர் செய்யும் முறை மாறவே இல்லை.

    இப்பொது கூட பார்கர் கம்பனி மை பேனாவை விற்கிறார்கள் பொலிருக்கிறதே! நான் இங்கிலாந்தில் ஒரு எழு வருஷம் முன்பு இருந்த போது வாங்கியிருக்கிறேன்.

    reply to this comment Thursday, 17.01.08, 16:38:31
  40. [40] from: K.Sanjeevi

    Hello Mr.Desikan,
    No body thought the Ink Pen what we use will vanish and it will have an article on it like this.(As if it is a old instrument used before years to gether).
    Good article and take back to the old memoirs...
    When I was checking at my Brother Desk Drawer there is not even one Ink Pen and now even the Key Appln Forms says not to fill in Ink Pen also makes one more nail in it s Coffin.
    The last ten years of the Mail-Mania Makes people seldom use the art of writing letters..(Neenga eppam last aga letter ezhutheergal?) also make the pen which plays a vital role in your life going away..
    Cheers!!!
    Sanjeevi.K

    reply to this comment Monday, 21.01.08, 01:57:52
  41. [41] from: Martin

    Desikan,
    Ink Pena patriya pathivu vegu saralam.
    Congrats!

    reply to this comment Wednesday, 23.01.08, 14:26:19
  42. [42] from: Nadadur Muralidharan

    Excellent article. I remember my school days back in late 80s and early 90s when my Physics teacher used "Turquoise Green" pen to sign our 10th and 12th observation and record notebooks. He thought that the color us unique and nobody can fake his signature. But namma pasanga ellam romba sharp. They went and got similar pen and ink and started signing teacher's signatures for guys who did not do their work on time.
    Still green in memory. Again wonderful article.

    - Nadadur Muralidharan, USA.

    reply to this comment Friday, 08.02.08, 01:49:14
  43. [43] from: சேதுக்கரசி

    அப்படியே பள்ளிக்கூடப் பருவத்துக்குப் போயிட்டு வந்தமாதிரி இருந்தது இந்தப் பதிவைப் படிக்கும்போது :-)

    reply to this comment Saturday, 09.02.08, 01:37:11
  44. [44] from: Nalini

    Hello Desikan,
    Kaalam ippo rombha mari poyi, naan ezhutharathe illai, only mails/calls/Chat. Appapo maligai kadai list poduven, handwriting rombhave vidhyasama irukum...

    Good Post,

    Cheers
    Nalini

    reply to this comment Saturday, 09.02.08, 22:12:31
  45. [45] from: Nalini

    Pencil sharp panrathu bayangara activity... no sharpeners at our house at that time, three of us sisters and 2 other cousins in a joint family set up used to annoy our father so much, he would use a razor blade (used one) for sharpening.....

    In this time of use and throw razors, my father still uses the old way of replacing blades...

    reply to this comment Saturday, 09.02.08, 22:15:27

Comment Info:

If you like, you may use the following semi-tags in your comments:

Add new comment:

Comments must be approved before being published. Thank you!