Desikan

  • Back to Main page

ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

Me and Sujatha

ஏப்ரல் மாதம் சுஜாதாவை சந்தித்த போது

"தேசிகன் ஒரு முறை ஸ்ரீரங்கம் போகணும்? என்னை அழைத்துக்கொண்டு போக முடியுமா ?" என்றார். 

இரண்டு வாரம் முன் இந்த பயணம் நிறைவேறியது.
அதை பற்றி சுஜாதா ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கிறார். ( அதை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி )

பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன்.

லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை.

வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீரங்கம் கோயிலை எப்போதோ இழந்துவிட்டேன் என்பது மறு ஊர்ஜித-மாயிற்று.

டிரஸ்டி திருமதி கிரிஜா மோகன் உதவியுடன், அதிக சிரமமில்லாமல் அரங்கனை வணங்க முடிந்தது. அர்ச்சகர்கள் வரவேற்றனர். நல்ல-வேளை... ‘‘சிவாஜி கதை என்ன?" என்று கேட்கவில்லை. ‘‘வாங்கோ! உங்களுக்காக இன்னிக்கு வைரமுடி சேவை. அதிர்ஷ்டம் பாருங்கோ!" இலவச அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்-கொண்டு, வெளியே வந்தேன். ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலதேசிகன் என்னைப் பத்திரமாக அழைத்துச் செல்ல, பெருமாள் தாயார் மட்டும் சேவித்துவிட்டு, ஆசுவாசத்துக்கு தாயார் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உட்கார்ந்து-கொண்டேன்.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்-பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார்.

மண்டபத்தில், சின்ன வயசில் இங்கே தேவதாசிகள் தீபம் கொண்டு-வருவதைப் பார்த்திருக்கிறேன். அழகழ காக ஆபரணங்களுடன் நிற்பார்கள். 1954 வரை இந்தப் பழக்கம் இருந் திருக்கிறது. இப்போது சொன்னாலே உதைப்பார்கள்.

வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப் பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி 111, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்.
சுஜாதாவுடன் பல்லவனில் திரும்பி வரும் போது, அவருடன் 5 மணி நேரம் பேசிக்கொண்டு வந்தது ஒரு இனிய அனுபவம். சினிமா, இலக்கியம், அரசியல், பழைய நினைவுகள் என்று பல்வேறு விஷயங்களை குறித்து பேச முடிந்தது.

1. தசாவதாரத்தின் கதை என்ன ? கமல் ஏற்று நடிக்கும் வேடங்கள் யாவை ?

2. சிவாஜி படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன ?  ரஜினி அந்த படத்தை பார்த்துவிட்டு உங்களிடம் என்ன சொன்னார் ? நீங்க ரஜினியிடம் என்ன சொன்னீர்கள் ?

3. அடுத்த சங்கர் படம் என்ன ? அதன் கதை என்ன ? யார் நடிக்க போகிறார்கள் ?

4. சிறுவயதில் நீங்கள் வளரும் போது, உங்கள் அப்பா உங்களுடன் இல்லாததை பற்றி எப்பவாவது நினைத்து வருந்தியதுண்டா ?

5. காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எப்போது எழுத போகிறீர்கள் ?
( ரொம்ப வற்புறுத்தி இரண்டாம் பாகம் எழுத சொல்லியிருக்கிறேன். அதற்காக முதல் பாகத்தை ஒரு முறை படித்து அவருக்கு குறிப்பு அனுப்ப உள்ளேன். அப்படியே சோழர்கால புத்தகங்கள் சிலவற்றையும் தேட வேண்டும் )

6. நாலாயிர திவ்ய ப்ரபந்ததற்கு சிலப்பதிகாரம், புறநானுறு போல் எளிய உரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்

7. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ?

பயணம் முடிந்த பின்,
"தேசிகன் இந்த டிரிப்புக்கு எவ்வளவு தர வேண்டும்?" என்றார்
"சிவாஜி படத்தின் பிரிவியூ டிக்கேட் ஒன்று!"  என்றேன்
( சிவாஜி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடி நான் அவருடன் இந்த படத்தை பார்த்தேன் )

ஸ்ரீரங்கம் மாறிவிட்டது என்று கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. போன வாரம் எனக்கு திரு.மணவாளனின் அறிமுகம் கிடைத்தது( என் தம்பி மூலமாக). அவர் எனக்கு சில பழைய ஸ்ரீரங்கம், திருச்சி படங்களை அனுப்பிவைத்தார். பார்த்துவிட்டு பெருமூச்சு விடுவதற்கு அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே தந்திருக்கிறேன்.

ஸ்ரீரங்கம்
மலைக்கோட்டை

( இந்த் படங்கள் எடுத்த வருடம் 1850 -1860 ! )

Desikan - clock 12:43:13 - Thursday, 21.06.07 - சுஜாதா - 4800x - pencil Permalink
Karma points: 4. Do you like this article? [Thumbs upthumbs-up - Thumbs upthumbs-down]

RSS 2.0 feed, Trackback, print preview, email this article

  • RSS 2.0 feed of this article, including comments: RSS 2.0 comments feed
  • You can [print] this article, [email] it, or export a [PDF].

Local search ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

Comments:

  1. [1] from: Mahesh

    Desikan,

    what are the answers for 1 to 7 ?

    where is you review on Sivaji and Sujatha's dialogues ?

    reply to this comment
    1. this comment inspired Desikan — #2
    Thursday, 21.06.07, 13:00:49
  2. [2] from: Desikan

    inspired by Mahesh — #1 Answers I cant give for all :-). I need to see the movie again to hear the dialouges.

    reply to this comment Thursday, 21.06.07, 13:05:24
  3. [3] from: Vaa.Manikandan

    அட்லீஸ்ட் 2,3 பதிலாவது தாங்க...இப்படி கலாய்க்காதீங்க‌

    reply to this comment
    1. this comment inspired Desikan — #11
    Thursday, 21.06.07, 13:11:51
  4. [4] from: siva

    மிகவும் நல்ல பதிவு தேசிகன். சிவாஜி பிரிவியூவின்போது சுஜாதா அவர்கள் வருவதை படம் பிடித்து காட்டினார்கள்(indiaglitz). மிகவும் தளர்ந்து இருப்பதைப்போல தோன்றியது. சார் உடல் நலன் நன்றாக இருக்கிறார்கள்தானே?

    சிவாஜி பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுவீர்கள் என எண்ணுகிறேன்.

    நன்றி.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #11
    Thursday, 21.06.07, 13:23:07
  5. [5] from: prasannaa

    please give us the answers

    reply to this comment
    1. this comment inspired Desikan — #11
    Thursday, 21.06.07, 13:24:35
  6. [6] from: siva

    also அந்த படங்கள் மிக அருமை.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #11
    Thursday, 21.06.07, 13:24:41
  7. [7] from: வடுவூர் குமார்

    <b>தண்டம் சமர்ப் பித்துவிட்டு,</b>
    தண்டன் அல்லது தண்டம்??எது சரி??

    reply to this comment
    1. this comment inspired Desikan — #11
    Thursday, 21.06.07, 13:46:31
  8. [8] from: வடுவூர் குமார்

    அந்த படங்களையுமா பிரிட்டீஷ்காரன் கொண்டு போகனும்?

    reply to this comment Thursday, 21.06.07, 13:49:25
  9. [9] from: revathi.narasimhan

    தேசிகன்,மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
    என்னை அழைத்துப் போகிறாயா என்று அவர் கேட்டதும் மனதை என்னவோ செய்கிறது.

    வாழ்த்துக்கள்.
    அவரிடம் இணையத்தமிழ்ப்பதிவுகளைப் பற்றி அபிப்பிரயம் கேட்கவில்லையா.
    வளவள என்றிருப்பதாகச் சொன்னாராமே:-)

    reply to this comment
    1. this comment inspired Desikan — #13
    Thursday, 21.06.07, 14:04:39
  10. [10] from: revathi.narasimhan

    இரண்டு படங்களும் வெகு ஜோர்.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #13
    Thursday, 21.06.07, 14:07:53
  11. [11] from: Desikan

    inspired by Vaa.Manikandan — #3 inspired by prasannaa — #5 இங்கு பொதுவில் சொன்னால் பிரச்சனை வரும். இன்னும் சில கேள்விகள் கேட்டேன். அந்த கேள்விகளை சொன்னாலே பிரச்சனை வரும்.
    inspired by siva — #4 indiaglitz லிங்க் இருக்கிறதா ? சுஜாதா பின்னாடி நான் தெரிந்தேனா ? சிவாஜி பற்றி நிறை பேர் சொல்லிவிட்டார்கள். சமயம் இருந்தால் சொல்லுகிறேன்.
    inspired by siva — #6 inspired by வடுவூர் குமார் — #7 படங்களை பிரிட்டீஷ்காரனிடமிருந்து மீட்டு கொடுத்த மணவாளனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    reply to this comment Thursday, 21.06.07, 14:11:56
  12. [12] from: செந்தழல் ரவி

    தேசிகன்....

    கேள்விகளுக்கு ஆன்ஸர் தருவது பற்றி ஒன்னுமே சொல்லாம பதிவை முடிச்சுட்டீங்களே ?

    எங்கே அய்யா விடைகள்.....பரபர...பரபர.....

    reply to this comment Thursday, 21.06.07, 14:15:33
  13. [13] from: Desikan

    inspired by revathi.narasimhan — #9 inspired by revathi.narasimhan — #10 குறிப்பாக தமிழ் பதிவுகளை பற்றி பேசவில்லை. ஆனால் பொதுவாக அதை பற்றி அவரிடம் கூறினேன். என்ன விதமாக எழுதுகிறார்கள், எதை பற்றி எழுதுகிறார்கள் என்பதை பற்றி சொன்னேன்.

    reply to this comment Thursday, 21.06.07, 14:19:29
  14. [14] from: siva

    http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/12516.html... - நீங்களும் தெரிகிறீர்கள் இப்போதுதான் கவனித்தேன்.

    reply to this comment
    1. this comment inspired Desikan — #15
    Thursday, 21.06.07, 14:21:37
  15. [15] from: Desikan

    inspired by siva — #14 நன்றி சிவா. இன்னொரு நண்பர் இந்த லிங்கை அனுப்பியுள்ளார் அதிலும் இருக்கேன்.
    http://behindwoods.com/image-gallery-stills/photos-2/sivaji-premiere/sivaji-08.html...

    reply to this comment Thursday, 21.06.07, 14:28:15
  16. [16] from: suresh kannan

    //சுஜாதாவுடன் பல்லவனில் திரும்பி வரும் போது, அவருடன் 5 மணி நேரம் பேசிக்கொண்டு வந்தது ஒரு இனிய அனுபவம்.//

    வயிற்றில் தீ!

    reply to this comment Thursday, 21.06.07, 15:18:51
  17. [17] from: Adiya

    Hey desikan,,
    once i red last week vikatan itself i could make out its you and waiting for your spl post on that. so nice. appuram like "Sivas comment" i saw you in indiagltiza also. gud.. really u had a nice trip, whats is the answers for 1 to 7 ?. post rest of the old srirangam pictures also.

    reply to this comment Thursday, 21.06.07, 19:25:34
  18. [18] from: Kannabiran Ravi Shankar (KRS)

    //தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு//
    தேசிகன்...தாத்தாச்சாரியார் தோட்டம் பற்றி எப்போ எழுதப் போறீங்க? ஒரு மினி தொடர் போடலாமே!
    மா, பலா, வாழை-ன்னு முக்கனியை வாசகர்களுக்குக் கொடுத்தாப் போல இருக்கும்! :-)

    திருவரங்கம் British Library படம் அருமை. அத்தனை வீடுகளின் முன்பும் கூரையா?

    reply to this comment Thursday, 21.06.07, 20:27:28
  19. [19] from: சுரேஷ் பினாத்த

    வயிற்றில் தீக்கு ரிப்பீட்டு.

    சில பதில்களாவது எக்ஸ்க்ளூசிவா சொல்றீங்களா?

    reply to this comment Thursday, 21.06.07, 22:39:28
  20. [20] from: அரவிந்தன்

    inspired by revathi.narasimhan — #9 inspired by revathi.narasimhan — #10 குறிப்பாக தமிழ் பதிவுகளை பற்றி பேசவில்லை. ஆனால் பொதுவாக அதை பற்றி அவரிடம் கூறினேன். என்ன விதமாக எழுதுகிறார்கள், எதை பற்றி எழுதுகிறார்கள் என்பதை பற்றி சொன்னேன்.
    -------------------------------------------------------------------------
    ஆக, சுஜாதா அவர்கள் தமிழ் வலைப்பதிவுகள் எதையும் தானாக படிப்பதில்லை..ஆனால் இந்த வார குங்குமம் இதழில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய கேள்வியொன்றுக்கு "வளவள" என்று சொன்னது எந்த வகையில் நியாயம்...சொல்லுங்க தேசிகன் அவருக்கேன் இந்த ஜல்லி............

    reply to this comment
    1. this comment inspired Desikan — #21
    Friday, 22.06.07, 05:09:56
  21. [21] from: Desikan

    inspired by அரவிந்தன் — #20 அரவிந்தன் சுஜாதாவிடம் இதை பற்றி இன்று பேசினேன். அவர் சொன்னதை இங்கு தந்துள்ளேன்
    கொஞ்சம் 'over written' என்பதை தான் அவர் 'வள வள' என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் 'Crisp' ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
    ( சில சமயம், நான் அல்லது வேறு சிலர் லிக் அனுப்பித்தால் படிப்பார் )

    reply to this comment Friday, 22.06.07, 14:04:30
  22. [22] from: kesavan.T.A

    With out a lamp post and cables? What a terrfic srirangam?.Marvellous Photograph.

    reply to this comment Saturday, 23.06.07, 19:00:49
  23. [23] from: pradeep

    desikan,
    i would like to take you to srirangam now! i want to ask you the same questions..hehehe..eppadi namma idea?

    nee kelvi kelu, naan badil solla mattenu sollidaatheenga...

    reply to this comment Saturday, 23.06.07, 23:08:19
  24. [24] from: பிச்சை ராகவன்

    view resembles from: தெற்க்கு கோபுரவாசல்
    அன்புடன்

    reply to this comment Sunday, 24.06.07, 07:14:40
  25. [25] from: Raghavan

    Desikan -

    On seeing Sivaaji for second time, I was able to list out and enjoy Sujatha's dialogues. I retain my view that the movie is a bore if you have expectations on Sankar. However the film is massive hit because of Thalaivar! (Innum 8 murai minimum baaki irukku). Super style maa!

    ***
    Your article and the Trichy photographs are fine. Yes it re-kindles utter helplessness for the olden days. Our family was so big (as Swamy Desikan would say in his stotrams) that I have seen four generations - my mothers grand dad, my grand dad, mother and my cousins all under the same roof in our erstwhile house which has now become a kalyana mandapam - V.S.MAHAL in memory of my late uncle V.Sadagopan.

    We used to own a lot of cattle and also a maattu vandi. I remember asking the driver to drive us around the adayavalanjan and uthra / chitra streets in the bullock cart. I also remember occassions like Deepawali when we would visit from to fathers home in Main Gaurd Gate (that is another nostalgic story) to meet my maternal granddad and his extended family of cousins et al. On a couple of occassions during the summer I have seen Sujatha too sitting in the thinnai and answering to a big gang on questions from "how to write stories?" to "VIKRAM kathai enna?" - (Remember the Kamal starrer Vikram?).

    We used to go on the maattu vandee to see Bale Paandiya and Sakalakalaa Vallavan in Rangaraaja or Devi Talkies with around 23 intervals across 4 hours amidst murukku, thattai, Love-O cola (can Love-O match Coca Cola, Desikan? - Impossible).

    BTW, My periamma had told me that you had visited along with Sujatha. Their house is also nice to stay (and eat!).

    Hmmm.. long dive into nostalgia! Thanks Desikan.

    Regards -
    Raghavan

    reply to this comment Monday, 25.06.07, 11:39:03
  26. [26] from: வெங்கடேஷ் வரதர

    //ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீரங்கம் கோயிலை எப்போதோ இழந்துவிட்டேன் என்பது மறு ஊர்ஜித-மாயிற்று.//

    தேசிகன், நியாபகம் இருக்கா? சுஜாதாவின் முந்தைய இரண்டு பிறந்தநாள் தொடர்பாக நீங்கள் வெளியிட்ட பதிவைப் பார்த்துவிட்டு நான் சொன்னது - 'வருடங்கள் தான் எவ்வளவு வேகமாகப்போகிறது'. ஆமாம்... அதற்கு ஒரு வருடம் ஓடிவிட்டதென் நீங்களும் சொன்னீர்கள்.

    உண்மையில், சில கணங்களில் நின்று கடந்தகாலத்தை நோக்கும்போது, அவ்வாறே தோன்றுகிறது. இன்று, 'பால்ய காலம்' என்பது distant pastஆகத் தெரிகிறது... 'இன்று' என்பதும் ஒரு நாளில் 'அந்தக்காலத்தில்' என்று ஆகப்போகிறது.... இந்த மாற்றங்கள் எல்லாமே, கடந்த காலத்திலிருந்து வெகு சீக்கிரம், வெகு தூரம் நம்மை அந்நியபடுத்தி விடுகிறது...ரொம்ப சீரியஸான விஷயமாகத்
    தெரிகிறது....

    சிக்னல் இல்லா மடிப்பாக்கம் கூட்ரோடு சாலையைக் கடக்கும்போது ஏற்படும் பல தயக்கங்கள்... டிராஃபிக் கூடிவிட்டதா அல்லது எனக்குத்தான் வயசாகிவிட்டதா என்று எண்ணத்தோன்றுகிறது.

    reply to this comment Friday, 29.06.07, 13:25:12
  27. [27] from: sami

    Thanks you for the trichy photos

    Esp i miss that malaikottai a lot. Todays one is very much commercialized.

    Can i post the photos in my blog? (with the link to this page)

    Thanks,
    Sami

    reply to this comment Friday, 29.06.07, 16:28:30
  28. [28] from: sami

    Thanks desikan, i have posted the same here http://samicuts.blogspot.com/2007/07/trichy-1850-1860.html...

    reply to this comment Wednesday, 04.07.07, 17:56:09
  29. [29] from: pinnuuttam or ethirvinai?

    hmmmmmmmm........

    oh, my srirangam

    oh, my sriranga ......

    reply to this comment Thursday, 05.07.07, 17:29:53
  30. [30] from: Vijay Subramanian

    I am an ardent fan of sujatha (Srirangathila porakkalainnu enakku romba korai!!!!!).. and i have no idea how i missed ur site all these days.FYI, after reading Srirangathu devadaigal(I and II), i came to Srirangam(i was in ma college days then).. to see all the streets and places he had described....FOTOS AWESOME...thanks

    reply to this comment
    1. this comment inspired Desikan — #31
    Wednesday, 18.07.07, 06:37:51
  31. [31] from: Desikan

    inspired by Vijay Subramanian — #30 Good to know about another Sujatha Fan :-)

    reply to this comment Wednesday, 18.07.07, 15:14:01

Comment Info:

If you like, you may use the following semi-tags in your comments:

Add new comment:

Comments must be approved before being published. Thank you!