Desikan
உயிர் நண்பன்
ராஜாராமனுக்கு 'அந்த' நினைவு திரும்பவும் வந்த போது சன் நியூஸ் சிறப்பு பார்வை ஓடிக்கொண்டிருந்தது. 'அந்த' நினைவு அடிக்கடி வருகிறது. இந்த ரகசியத்தை தவிர எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார் - ஸ்கூல் பஸ்ஸில் ஒண்ணுக்கை அடக்க முடியாமல் ஜட்டியிலேயே போனது, சிகரெட் குடித்தது, கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போது அவர் மகன் காலேஜில் படிக்கிறான், இன்னும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை.
சன் நியூஸ் சிறப்பு பார்வையின் போது 'அந்த' நினைவுடன் ராஜாராமனுக்கு ஓர் அவஸ்தையும் ஏற்பட்டது. ராஜாராமனுக்கு முன் டாக்டர் தோன்றி "என்னப்பா ஆச்சு?" என்று கேட்டால், அவருக்கு அதை விவரிக்க முடியாது. "கொஞ்சம் uneasy" என்று தான் சொல்லமுடியும். அஜீரணமா, நெஞ்செரிச்சலா, வாய்வு தொல்லையா என்று சொல்ல தெரியாத ஒர் அவஸ்தை. தண்ணீர் குடித்தார். அமிர்தாஞ்சனத்தை தடவிக்கொண்டார். மூச்சை நன்றாக இழுத்து விட்டார். கொஞ்சம் ஜெலுசில் குடித்தார். மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு என்று நினைவு படுத்தி பார்த்துக்கொண்டார். கோலங்கள், செல்வி தொடர்களுடன் அவஸ்தையும் தொடர்ந்து. முதுகுப்பக்கம் கொஞ்சம் வேர்த்த போது அது ஹார்ட் அட்டாக் என்று அவருக்கு தெரியவில்லை.
"என்னடா உடம்புக்கு ?"
"வயத்த வலி"
"அதனால தான் நேத்திக்கு ஸ்கூலுக்கு வரலையா ?" என்றான் ஜெயராமன்
ஜெயராமன், ராஜாராமன் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள். பக்கத்து பக்கத்து வீடு. ஒரே ஸ்கூல். ஒரே வகுப்பு. ஒன்பதாவது படிக்கிறார்கள். இரண்டு பேருக்கும் ராமன் என்று முடிகிற பேர். ஒன்றாக தான் விளையாடுவார்கள். கிரிக்கேட், கமல், நன்னாரி சர்பத் பிடிக்கும்; கணக்கு டீச்சரை பிடிக்காது. மீசை வளரலாமா என்று யோசிக்கும் அதிகம் சிக்கலில்லாத பருவம். ஆனால் சிக்கலில் மாட்டிக்கொண்டார்கள்.
சிக்கல் இல்லாத சந்தில் அந்த ஆஸ்பத்திரி அமைந்திருந்தது. வரவேற்பு பகுதியில் ஃபைபர் நாற்காலிகள் வரிசைகள். கவலையா, தூக்கமா என்று கண்டுபிடிக்க முடியாத பார்வையாளர்கள். கிரானைட் தரையில் பிள்ளையார் பிசியாக எல்லோருடைய கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். பணிப்பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்திருந்தார்கள். ஆயாக்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரி ஒரு மினி தொழிற்ச்சாலை போல இயங்கிக்கொண்டிருந்தது.
ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரியில் ராஜாராமன் முதல் மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு செல்லப்பட்டார். எல்லோருக்கும் ஆக்ஸிஜன்,. மானிட்டரில் இதயத்தின் துடிப்புகள் என்று அமைதியான இடம். ஆனால் எல்லோரிடமும் பயம் இருந்தது.
"டாக்டர் பயப்பட ஒண்ணுமில்லையே?"
".."
"நீங்க தான் டாக்டர் எப்படியாவது.. "
ராஜாராமனுக்கு நாக்குக்கு கீழே அடக்கிக்கொள்ள மாத்திரை தரப்பட்டது. சில நிமிடங்களில் ராஜாராமனுக்கு un-easy, easy ஆனது.
அங்கிருந்த ஒரு டியூட்டி டாக்டர் ரத்த அழுத்தம். பல்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே செல்போனில் தன் தலைமை டாக்டரிடம் பேசினார்.
"இதோ பாருங்க முதல்ல ஒரு இ.சி.ஜி அப்புறம் அன்ஜியோகிராம் எடுக்கணும். அன்ஜியோப்ளாஸ்டியா அல்லது பைபாஸா என்று சீஃப் டாக்டர் தான் முடிவு செய்யணும்"
ராஜாராமன் கலவரமாக "டாக்டர் எனக்கு ஒண்ணும் இல்லை, எனக்கு எந்த ஆபரேஷனும் வேண்டாம்"
"என்ன இப்படி குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறீங்க. இது ஒரு எக்ஸ்ரே மாதிரி பயப்பட வேண்டாம். திரும்ப திரும்ப தப்பு பண்ணாதீங்க"
"டேய் வேண்டாண்டா, அதெல்லாம் தப்பு"
"ஒண்ணும் ஆகாது"
"யாராவது பார்த்தா..அசிங்கம்"
"லைட் தான் அணச்சிருக்கே"
"வேண்டாம்டா.."
ஹார்மோன்கள் ஓவர் டைமில் வேலை செய்ய, தோல் இல்லாத இரட்டை வாழைப்பழம் போல் இருந்தார்கள். இதற்கு மேல் என்ன நடந்தது என்று விவரிப்பது நாகரிகமாக இருக்காது.
"வேண்டாம்டா .. இதெல்லாம்.. தப்பு..பயமா இருக்கு"
"பயப்படாதடா ஒண்ணும் ஆகாது"
ராஜாராமனுக்கு ஆஸ்பத்திரியில் பயம் வந்தது. மரண பயம்.
"டாக்டர் அவருக்கு சரியா போய்டுமா"
"இப்போ ஓண்ணும் சொல்ல முடியாதம்மா அன்ஜியோகிராம் எடுத்தப்புறம் தான் சொல்லமுடியும். எந்த ரத்தகுழாயில் எவ்வளவு அடைப்பு என்று"
"ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா அவருக்கு"
"இல்லை டாக்டர், பொய் கூட சரியா சொல்ல வராது"
"பொய் சொல்லாதே. ஏண்டா என்ன பார்த்தா பயந்து ஓடர"
ராஜாராமன் தரையை பார்த்துக்கொண்டு "அதெல்லாம் ஓண்ணுமில்லையே"
"இன்னிக்கு ராத்திரி எங்க வீட்டுக்கு வா யாருமில்ல. என்ன ?"
ராஜாராமன் பதில் சொல்லவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமா, குற்ற உணர்ச்சியா?. யாரிடம் கேட்பது, என்ன செய்வது. உளவியல் ரீதியாக ஒரு பெரும் மனச்சிக்கல் ஏற்பட்டது. அருவருப்பா, பயமா, வெட்கமா?. இந்த நினைப்பு வரும்போது எல்லாம் வேர்த்து கொட்டியது.
"ஏம்மா வேர்த்து விட்ட போதே உடனே கொண்டு வந்திருக்க வேண்டாமா ?"
இசிஜி எடுத்தபோது இதயத்தில் மிக சமீபத்தில் ஒரு தாக்கம் தாக்கியிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. தலைமை டாக்டரிடம் திரும்பவும் போனில் பேசிவிட்டு தான் செய்ய வேண்டியதை குறித்துக்கொண்டார்.
"நாளைக்கு மார்னிங் உடனே அன்ஜியோகிராம் எடுக்கணும். அதுவரைக்கு ICUல் அப்சர்வேஷனில் இருக்கணும். ஸுகர், பி.பி எதாவது இருக்கா? " என்றார்
"இதுவரைக்கும் இல்லை"
அடுத்த நாள் காலை டாக்டர், பளிச்சென்று வந்தார். இசிஜி, ரிப்போர்ட் எல்லாவற்றையும் வேகமாக பார்த்தார்.
"உடனே அவருக்கு ஒரு அன்ஜியோகிராம் எடுக்கவேண்டும் தேவைப்பட்டால் உடனே பைபாஸ் செய்யவேண்டும்" என்று சொல்லிவிட்டு அடுத்த பேஷண்டிடம் "என்ன பசி எடுக்கிறதா?" என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.
அந்த தனியார் ஆஸ்பத்திரியில் ராஜாராமனுக்கு அன்ஜியோகிராம் செய்யபட்டு, அவர் மனைவியிடம் ஒரு சிடியில் எவ்வளவு அடைப்பு என்பதை போட்டு காண்பித்து விளக்கினார்.
"ரொம்ப சிக்கலாகிவிட்டது, நீங்க முன்பே இவரை ஆஸ்பெட்டலுக்கு கொண்டு வந்திருக்கணும். இப்ப பாருங்க ரொம்ப காம்பிளிக்கேட்டடாக இருக்கு அவருடைய ஹார்ட் ஐம்பது சதவிகிதம் தான் வேலை செய்கிறது. சீஃப் டாக்டர் கே.ஜெ அமெரிக்கா போயிருக்கார் வரும் புதன் கிழமை வந்துடுவார். வந்த அடுத்த நாள், இவருக்கு உடனே பைபாஸ் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. திறமையுள்ள சர்ஜன் தான் கைய வைக்கணும். ஆர்ட்டரியெல்லாம் எழுவது, எண்பது சதவிகிதம் அடைச்சுக்கிடக்கு. அதில் ஒண்ணு 'விடேஸ் ஆர்ட்டரி'. இவர் பொழைச்சதே பெரிய ஆச்சரியம்"
" ஆப்பரேஷன் பண்ணித்தான் ஆகணுமா ?"
"ஏம்மா இவ்வளவு சீரியஸாக இருக்கு இப்படி கேக்கிறீங்க?"
"சரி டாக்டர், அஷ்டமிலெ வேண்டாம்"
"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா, வியாழக்கிழமை இவருக்கு பைபாஸ் செய்யணும். இவர் பிளட் குரூப்புக்கு பிளட் ஏற்பாடு செய்யுங்க. . ரொம்ப எக்சைட் ஆகாம பார்த்துக்கோங்க. ஆஸ்பத்திரி டையட் தான் சாப்பிடணும்"
ராஜாராமனுக்கு பசித்தது ஆனால் சாப்பிட முடியவில்லை. தூக்கம் வரவில்லை. வந்தாலும் கனவு வந்து எழுப்பிவிட்டது. யாரை பார்த்தாலும் பிடிக்கவில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போது ஏனோ கோபம் வந்தது.
அம்மா தான் கவனித்து "ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே உடம்புக்கு என்ன?"
"ஓண்ணுமில்லமா நான் நல்லா தான் இருக்கேன்"
"அடிக்கடி தூக்கத்தில உளர..எதையாவது பார்த்து பயந்துட்டையா ?"
தரையை பார்த்துக்கொண்டு "இல்லமா"
அரையாண்டு தேர்வில் மிக கம்மியான மார்க் தான் வாங்கியிருந்தான். "குழந்தைக்கு ஏதோ திருஷ்ட்டி" என்று அவன் அம்மா அவனுக்கு சுடு மோர் கொடுத்தாள். சமயபுரத்துக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தாள். சில மாதங்களில் ராஜாராமன் அப்பாவிற்கு டிரான்ஸ்பராகி சென்னைக்கு சென்றார்கள்.
ஜெயராமனை பார்க்காதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நாளடைவில் அந்த நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து பிறகு எப்போதாவது வரும்.
ராஜாராமனுக்கு மயக்க மருந்து கொடுக்கபட்டு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தார். பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் கே.ஜெ வரவைக்கபட்டு இந்த ஆப்பரேஷன் செய்து முடிக்கப்பட்டது. ராஜாராமனின் அடைபட்டிருக்கும் முக்கியமான இரத்தகுழாய்களுக்கு மாற்று வழி செய்து முடிக்க ஐந்து மணி நேரம் ஆனது. முடித்தவுடன் டாக்டர் செரியன் அழைத்ததால் ஒரு சின்ன பெண் குழந்தைக்கு பைபாஸ் செய்ய அவசரமாக செல்லும் போது...
"ரத்த அழுத்தம், பல்ஸ் எல்லாம் நார்மல். சீக்கிரமே கண்விழிப்பார். இன்னும் ஒரு மாசத்தில ஆபிசுக்கு போகலாம்"
"நீங்க தான் டாக்டர் தெய்வம்"
"அதெல்லாம் பெரிய வார்த்தை. நான் சாயங்காலம் நினைவு வந்தவுடன் வந்து பார்க்கிறேன்"
நினைவு வந்தவுடன் ராஜாராமனுக்கு கொஞ்சம் பசித்தது. சீக்கிரம் வீட்டுக்கு போனால் தேவலை என்று தோன்றியது.
டாக்டர் கே.ஜெ அடுத்த நாள் காலை ராஜாராமனை பார்க்க பத்து மணிக்கு வந்த போது ராஜாராமனுக்கு நேற்று கொடுத்த மருந்தினால் பாதி தூக்கத்தில் இருந்தார்.
"ராஜாராமன் இப்ப இப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் டாக்டர். கொஞ்சம் அசதியா இருக்கு"
"ரொம்ப வொரி பண்ணீக்காதீங்க. டேக் ரெஸ்ட்.உங்க சொந்த ஊர் திருச்சியா ?"
"ஆமாம்"
"டேய் என்ன தெரியலை நான் தான் ஜெயராமன்"
ராஜாராமன் கண்சிமிட்டாமல் ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
14:35:00 - Monday, 03.07.06 - சிறுகதை - 3713x -
Permalink
Karma points: 1. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search உயிர் நண்பன்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









Hello Desikan sir,
Good story.....Have to read it once again....
reply to this comment Monday, 03.07.06, 14:51:30தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி! பாராட்டா எடுத்துக்கிட்டாலும் சரி!!
படிச்சதும் கிடைச்சது, ஒரு நல்ல சுஜாதாவோட கதை படிச்ச திருப்தி
))
reply to this comment- this comment inspired Desikan — #3
Monday, 03.07.06, 15:30:51inspired by இளவஞ்சி — #2 நன்றி. பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்.
reply to this comment Monday, 03.07.06, 15:40:55Nice Strory.....
reply to this comment Monday, 03.07.06, 17:24:26சுஜாதாவின் ரசிகர்/சீடர்ன்னு கதையிலே நிருபிச்சிருக்கிங்க. வாழ்த்துகள்.
reply to this comment Monday, 03.07.06, 18:12:57Sathiz, karthik, KVR - மிக்க நன்றி.
reply to this comment Monday, 03.07.06, 18:49:07Nice story.
reply to this comment Monday, 03.07.06, 19:16:51இரண்டாம் முறை படித்ததுக்கு அப்புறம் தான் எதோ புரிந்தது நம்ம மரமண்டைக்கு! நல்ல கிரைம் நாவல்கள் படித்த எபக்ட்
reply to this comment Monday, 03.07.06, 22:24:54//ராஜாராமன் கண்சிமிட்டாமல் ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார். //
reply to this comment Tuesday, 04.07.06, 08:11:37இரண்டாவது அட்டாக் வந்ததா ? இல்லையா ? என்று சொல்லாமல் முடித்துவிட்டீர்கள்
சிதம்பரம் - நன்றி.
reply to this comment Tuesday, 04.07.06, 08:18:42கோவி.கண்ணன் -
ராஜாராமன் கண்சிமிட்டாமல் ஜெயராமனையே பார்த்துக்கொண்டிருந்தார்.. நெற்றியில் வியர்த்தது !
Very nice story... half way through the story, i guessed that Rajaraman had got the first attack after hearing that Jeyaraman had died. Sujatha effect irundhadhu Jeyaraman.
reply to this comment Tuesday, 04.07.06, 08:34:52தேசிகன்.
உண்மைதான். வளரும்பருவத்தில்
மனம் கண்டதை நினைத்தால் உடல் வேறு நினைக்கும்---தியரி.
ஹாச்பிடலுக்குச் செல்ல வேண்டிய அவசரம் வந்ததே
reply to this comment Tuesday, 04.07.06, 08:38:02நினைப்பு பாதித்ததால் என்று நினைக்க்த் தோன்றுகிறது.
நல்ல கதை.
Keerthivasan, Andal narasimhan - உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி. நீங்கள் சொல்லுவது சரி.
reply to this comment Tuesday, 04.07.06, 13:49:14நல்ல நடை தேசிகன். மிகவும் அருமையாக எழுதியிருந்தீர்கள்.
ராஜாராமைக் கொன்று விட்டீர்களே. இது அநியாயம். அக்கிரமம். ஒத்துக்கொள்ளவே முடியாது.
reply to this comment- this comment inspired Desikan — #15
Tuesday, 04.07.06, 14:32:32inspired by கோ.இராகவன் — #14 நான் என்ன செய்ய முடியும். தேன்கூடு தலைப்பு அப்படி
reply to this comment Tuesday, 04.07.06, 15:07:35நல்ல கதை. ரசித்தேன்
reply to this comment- this comment inspired Desikan — #17
Tuesday, 04.07.06, 20:51:36inspired by Shankar — #16 மிக்க நன்றி.
reply to this comment Wednesday, 05.07.06, 09:48:51விஜய்சாரதி ஞாபகம் வருது.. (இந்த கமெண்ட் உங்களுக்குப் புரியாட்டா வேற யாருக்கும் புரிய வாய்ப்பே கிடையாது)
reply to this comment- this comment inspired Desikan — #20
Wednesday, 05.07.06, 11:55:12சற்றே பெரிய சிறுகதை
இளவஞ்சியின் கருத்துக்கு உடன்படுகிறேன்.
reply to this comment Wednesday, 05.07.06, 12:14:05inspired by பினாத்தல் சுரே — #18 இதை பினாத்தல் என்று விட முடியவில்லை
என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
reply to this comment Wednesday, 05.07.06, 14:05:37sorry. enaku puriyala.avar irandutara?Story-ku ippadiyellam vilakam ketka koodadhu.But i want to know the story.
reply to this comment- this comment inspired Desikan — #23
Wednesday, 05.07.06, 15:04:38கடைசி வரியில ஆனாலும் ரொம்ப மோசமுங்க நீங்க...
reply to this commentஆமா, இப்படிக் குத்த உணர்வும் கடைசி வரைக்கும் நிலைக்கிற அளவுக்கு மனித மனம் ஞாபக சக்தி கொண்டதா என்ன?
- this comment inspired Desikan — #24
Wednesday, 05.07.06, 15:12:31inspired by thambu — #21 ஐயோ!. என்ன சார் என் எழுத்து அவ்வளவு மோசமா ?
reply to this comment Wednesday, 05.07.06, 15:17:02inspired by பிரதீப் — #22 மனித மனத்தை யாரும் புரிந்துக்கொள்ள முடியாது. அதுவும் சின்ன வயசில் நடந்தது எல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்கும்.
reply to this comment Wednesday, 05.07.06, 15:18:43Simply WOW.
I was thinking at the end you would mention some other author's name. At last, idhu neenga ezhudinadhu dhaana. Expecting lot more stories of this sort from you.
The quality of story telling rocks.
- Smruthi
reply to this comment- this comment inspired Desikan — #27
Wednesday, 05.07.06, 22:16:47தலைவர் கதை ஒண்ணுலெ ஸ்பிலிட் பெர்சனாலிட்டி - விஜய்+ சாரதி ன்னு ரெண்டு ஆள் மாதிரி எடுத்துகிட்டு போயி கடைசியிலே ஒரு ஆள்னு முடிப்பார். இது அந்த மாதிரி இல்லாட்டாலும், சில சிமிலாரிட்டிஸ் இருக்கறதால சொன்னேன். பினாத்தலேதான்!
reply to this comment- this comment inspired Desikan — #28
Wednesday, 05.07.06, 22:36:21inspired by Smruthi — #25 Thanks for your comments.
reply to this comment Thursday, 06.07.06, 10:26:05inspired by பினாத்தல் சுரே — #26 விளக்கத்திற்கு மிக்க நன்றி.
reply to this comment Thursday, 06.07.06, 10:27:35தேசிகன் நீங்க கதை எழுத ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கதை எழுதும் நடை மற்றும் நீங்கள் சொல்ல வந்த கதையை விளக்கிய விதம் அனைத்தும் நன்று, ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த கரு சற்றே பார்த்து கையாள வேண்டிய ஒன்று. கதையிலிருந்து சற்று இப்படி (அ) அப்படி சாய்ந்தாலும் கதை அபத்தமாகியிருக்கும். உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் அனைவரும் ரசிக்க கூடிய நல்ல கதை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன். என் கருத்து ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். ஒரு நல்ல நண்பருக்கு உண்மையான கருத்தை தெரிவிக்க வேண்டும் என எண்ணினேன்.
reply to this comment- this comment inspired Desikan — #30
Thursday, 06.07.06, 21:13:20inspired by ஸ்ரீனிவாசன் — #29 ஸ்ரீநிவாசன் கருத்துக்கு நன்றி. ஆமாம் நீங்கள் சொல்லுவது சரி. ரொம்ப யோசனைக்கு பிறகே இந்த கதையை எழுதினேன்.
reply to this comment Friday, 07.07.06, 11:09:55According to psychologist during the teenage period first love develop on his best friend. At that age one or two endevour could take place & this is normal. When teen grow two more years attraction goes towards the opposite sex. Teen started to build physic and grooming himself to get attention from the girls.The endevour was a dream and goes back of the mind. Jeyaraman & Rajaraman had their first endevour ,it happend due to the attraction both had on each other.If one should have objected strongly the endevour wouldn't have happend. So there was no necessity for Rajaraman to have guilty feelings in his mind. In the Universe these type of endevours are common everwhere. In the western world these are coming out in open. But in the Indian sub continent these are wraped under the carpet.
reply to this comment- this comment inspired Desikan — #33
Saturday, 08.07.06, 13:21:03Indha kadayil twist illai endralum 'FIRE' irukiradhu....Desikan inimel kadai ezhthumbothu 'U' alladhu 'A' endru symbol podavum..
good work keep it up...
reply to this comment- this comment inspired Desikan — #34
Sunday, 09.07.06, 09:57:08inspired by Eswarthasan — #31 What you say is true. //So there was no necessity for Rajaraman to have guilty feelings in his mind.// I have seen/read people feeling guilty for this kind of act, and based on this only my story line was framed.
reply to this comment Monday, 10.07.06, 11:01:16inspired by Mr& Mrs Kazhgu — #32 அப்படியே செய்கிறேன். இந்த கதை 'U'
reply to this comment Monday, 10.07.06, 11:02:10Dear Desikan Sir,
reply to this commentAfter long time,I read u'r story.I wasn't disappionted.U'r way of narration is superp.But, it reminded me the film boys which also dealt with adolescents.But, I felt u'r description"idutharkku male vivarithal nandrai irukkathu" is not necessary.U could simply put some dots there .......
It would be more perfect.Keep writing.We expects lot from u.
BY,
Karthick
- this comment inspired Desikan — #36
Monday, 10.07.06, 19:32:26inspired by Karthick — #35 Thanks for your comments and suggestions.
reply to this comment Tuesday, 11.07.06, 11:21:53kathai nanadru! hospitalai patriya vibarangalal hospitalail irunpathu pondru irunthathu.
reply to this comment Tuesday, 11.07.06, 20:43:41neenge en sujatha sir mathiri vikatan, kumudam bookskalil eluthuvathilai? ungal eluthu nalla irukuthu. anthe bookskalil eluthinal lakhs kanakil people padithu santhosepaduvarkale!
desikan sir en vottu ungaluku than.
reply to this comment Friday, 21.07.06, 16:17:28மோசமில்லை.
உங்கள் எழுத்து நடை, சில வரிகள் அப்படியே சுஜாதாவின் நகல் போலிருக்கிறது. சுஜாதவைத் தவிர வேறு யார் அப்படி எழுதினாலும் அயர்ச்சி வருகிறது. ஜெயராமன் டாக்டராக வரும் க்ளைமாக்ஸை 1001-ஆம் தடவையாக நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். தமிழ்நாடகம் அல்லது தமிழ்த்திரைப்படம்.
இங்கு வந்த பல பின்னூட்டங்கள் கதையைவிட சுவாரஸ்யம். ஜெயராமன் இறந்ததால் ராஜாராமனுக்கு நெஞ்சு வலி என்கிறது ஒன்று. ராஜாராமனைக் கொன்றது தவறே என்கிறது மற்றொன்று. முதல் செய்தியில் மைல்ட் அட்டாக்கும் இரண்டாவது செய்தியில் ஹெவி அட்டாக்கும் எனக்கு வந்தது. எனக்குத்தான் புரியவில்லை போல.
ரா.ரா.வுக்கும் ஜெ.ரா.வுக்கும் சிரார்த்தம் வைக்கும்போது சொல்லி அனுப்பவும்!
reply to this comment- this comment inspired Desikan — #40
Thursday, 17.08.06, 08:34:25inspired by Haranprasanna — #39 மிக்க நன்றி
reply to this comment Thursday, 17.08.06, 16:10:34Hi Desikan, good story..nice kindling thoughts!!!
reply to this comment Friday, 15.09.06, 20:03:22Good naration. its close to sujatha style.
reply to this comment Wednesday, 20.09.06, 19:54:37Good work done keep it upppppppppppp
Goos story naration. Close to sujatha style
Keep it up
reply to this comment Wednesday, 20.09.06, 19:55:38கதை கலக்கல், சற்று எடிட் செய்திருக்கலாம்..
***
// கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை//
ஆயிரம் பீர் பிராண்டுகள் வந்தாலும் கல்யாணிக்கு ஈடாகுமா ????? ஞாபகப் படுத்தியதற்க்காக இந்த நிரல்துண்டு
for(i=0;i <= 100; i++)
reply to this comment Friday, 06.10.06, 16:43:41printf("நன்றி");
Story is very good.
reply to this comment Friday, 06.10.06, 16:51:49A very good story, keep it up
reply to this comment Friday, 06.10.06, 18:49:01dear desikan
reply to this comment Sunday, 12.07.09, 13:59:51na konjam tube light.some of sujatha stroies are like this,what happen realy on that night.pl explain me
sathish