Desikan
சித்திர நாலாயிரம்
நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம்.

நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார்.

உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார்.
அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்கங்களுக்கு கச்சிதமாக பொருத்தியுள்ளார். ( 'திருக் கமல பாதம்வந்தென்கண்ணி' என்ற வரியை- பாதத்திற்கும், நீள்முடியன்.. என்ற வரி தலைக்கும்; திரு வார மார்பதன்.. - மார்புக்கும் அழகாக பொருத்தியுள்ளார்) பிரபந்தத்தை அனுபவித்தால் தான் இது போல் செய்யமுடியும்.
இதே போல் ராமாநுஜ நூற்றந்தாதியைக் கொண்டு ராமானுஜர், குலசேகர ஆழ்வார் பாடிய 10ஆம் திருமொழியை கொண்டு ராமர் பட்டாபிஷேகம்; விஷ்ணுசகஸ்ரநாமம் கொண்டு விஷ்ணு; மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பைக் கொண்டு நம்மாழ்வார்; திருப்பாவையை கொண்டு ஆண்டாள், 4000 திவ்வியபிரபந்த அடிவரவை கொண்டு ஸ்ரீநிவாச பெருமாள்; என்று எல்லா படங்களும் வியப்பை தருகின்றன.
ஸ்டேட் பாங்கில் வேலை பார்த்துக்கொண்டு, வீட்டில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சுமார் 60 நாட்கள் கஷ்டப்பட்டு இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த ஓவியம் அனைத்தும் புத்தகமாக வந்துள்ளது.
ஓவியம் பார்க்க வந்த ஒருவர் "சார் புத்தகம் என்ன விலை?" என்றார்.
"இந்த புத்தகத்துக்கு விலை நிர்ணயம் செய்யவில்லை, ஆனால் ஒரு திவ்விய தேசத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்" என்றார் ஸ்ரீநிவாசன் தன்னடக்கத்துடன்.
இந்த செய்தி பற்றி
TheHindu
தினத்தந்தி

* ஸ்ரீரங்கத்தை கடந்து வந்த போது "பாபி" திரைப்படம் ஊர்வசி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிகப் பெரிய போஸ்டர். அதற்கு கீழே "நான் ரெடி, நீங்க ரெடியா" என்று ஒரு பெண் சொல்லுவதாக... காவிரி பாலத்திற்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் எவ்வளவு வித்தியாசம் !
* திருச்சி வெயிலுக்கு வெள்ளரி பழம் கிடைக்கிறது. அழகாக வாழை மட்டையில் சுற்றி....ஒரு பெரிய பழத்தின் விலை ரூ10. சக்கரை, ஐஸ் கட்டியும் போட்டு சாப்பிட்டால் ... ஆஹா
சில படங்கள்:
1234திரு S.R.ஸ்ரீநிவாசனின் முகவரி
149, ஸ்ரீரங்க பாதுகா,
கீழச்சித்திர வீதி,
ஸ்ரீரங்கம்,
திருச்சி - 620006
Phone: 0431-2437835
Mobile: 94437 37321srirangasri1960@yahoo.co.in
14:15:00 - Tuesday, 30.05.06 - ஸ்ரீவைஷ்ணவம் - 4773x -
Permalink
Karma points: 8. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search சித்திர நாலாயிரம்
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









அழகான பதிவு.
மிகவும் மன நிறைவான ஒரு விஷயத்தை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி.
இந்த படங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. தங்களிடம் இருந்தால் பதிக்கலாமே?
நன்றி
reply to this comment- this comment inspired Desikan — #2
Tuesday, 30.05.06, 15:04:19inspired by jayaraman — #1 சில படங்களை நான் படம் எடுத்தேன். கொஞ்சம் சுமாராக வந்துள்ளது அவைகளை கடைசியில் இணைத்துள்ளேன். நன்றி.
reply to this comment Tuesday, 30.05.06, 15:41:45ஓவியக்கண்காட்சி வருடம் முழுதும் உண்டா?இந்தியா வரும்போது காண ஆசை.
reply to this comment- this comment inspired Desikan — #5
Tuesday, 30.05.06, 15:58:19Really good one Mr.Desikan.
reply to this comment- this comment inspired Desikan — #6
Tuesday, 30.05.06, 16:04:31inspired by (துபாய்)ராஜா — #3 நேற்றோடு முடிந்தது. புத்தகம் வாங்கி பார்க்கலாம். அதிலும் அந்த ஓவியம் எல்லாம் இருக்கிறது.
reply to this comment Tuesday, 30.05.06, 16:07:00inspired by Vaa.Manikandan — #4 Thanks.
reply to this comment Tuesday, 30.05.06, 16:07:50Very creative.. Desikan, Vaarthaigal theriyara madhiri yedhavadhu padam irukka ?
BTW, Nalla Dharisanam.. Nandri.
reply to this comment Tuesday, 30.05.06, 16:08:47அருமையான ஓவியங்கள். நன்றி தேசிகன். எல்லா ஓவியங்களும் இருக்கும் புத்தகத்தை அவரிடம் மட்டும் தான் வாங்கமுடியுமா? வேறு எங்காவது கிடைக்கிறதா? திரு. ஸ்ரீநிவாசன் அவர்களின் முகவரி தரமுடியுமா? தனிமடலில் அனுப்பினால் போதும்.
reply to this comment- this comment inspired Desikan — #10
Tuesday, 30.05.06, 16:12:13His hardwork should be appreciated. Moreover these things should be informed to the people. Thanks Desikan for this post.
reply to this comment Tuesday, 30.05.06, 16:24:23inspired by குமரன் (Kumaran) — #8 குமரன் இன்னும் சில மணி நேரத்தில் முகவரியை தர முயற்சி செய்கிறேன்.
reply to this comment Tuesday, 30.05.06, 16:52:23பார்த்தேன் நன்றாக உள்ளது
reply to this comment Tuesday, 30.05.06, 21:13:28Dear Desikan
Thanks for the info.
Regards
reply to this comment Wednesday, 31.05.06, 04:40:23Sa.Thirumalai
Dear Desikan,
very very happy to view the 108 divya desams in your site.
by perumal's and acharya's help only it is possible to finish this project. Thank you viewers of this site and thank you my well wishers the comments encouraged me to start another project in
this field. thank you once again
endrum annan thiruvadigalil,
reply to this comments.r.srinivasan "srirangasri" new 149 east chitrai st srirangam trichy 620006 tamil nadu india ph 0431-2437835 cell 9443737321
e mail: srirangasri1960@yahoo.co.in
- this comment inspired Desikan — #16
Wednesday, 31.05.06, 09:16:11I have updated Mr.Srinivasan's Address, Phone number etc., You can get the book from this address.
reply to this comment Wednesday, 31.05.06, 09:21:15ரொம்ப நல்ல பதிவு, சொல்ல வார்த்தைகள் இல்லை.
reply to this comment- this comment inspired Desikan — #17
Wednesday, 31.05.06, 09:27:41inspired by s r srinivasan — #13 Dear Srinivasan,
I am really surprised to see your comment in my Blog. It was my pleasure!.
reply to this comment Wednesday, 31.05.06, 09:40:29regards,
- desikan
inspired by சிவமுருகன் — #15 நன்றி சிவமுருகன்.
reply to this comment Wednesday, 31.05.06, 09:46:24Desikan -
Amazing. Such people are harebingers in taking our "neengaatha selvam" to the future generations. We might help him host a website??? I need the address to get the book.
Regards -
reply to this commentRaghavan
- this comment inspired Desikan — #19
Wednesday, 31.05.06, 11:27:03inspired by RAGHAVAN (ex-lucent) — #18 The address is at the end of the post. He was looking for some sponsor for his website. You can get intouch with him.
reply to this comment Wednesday, 31.05.06, 12:06:15Desikan sir,
reply to this comment Thursday, 01.06.06, 01:10:44Thanks for the article and Great work by Srinivasan. convey my regards to him.
நல்ல பதிவு. தன் ஓவியத்தை தவமாய் செய்த ஸ்ரீனிவாசன் அவர்களை நாங்களும் அறியச்செய்த உங்களுக்கு அந்த பரமபதத்தானின் அருள் எப்போதும் உண்டு.
reply to this comment- this comment inspired srirangasri — #23
Thursday, 22.06.06, 00:37:38dear desikan
well and wish the same i have now completed a project regarding shri bagavad gita. i drew a picture of shri krishna with archuna , thirutharastran and sanchayan with 700 slogos of sri bagavad gita
the special features of the picture
the pictures of the krishna archuna thritharastran and sanchayan are drawn with the slogams spoked by the respective persons
ex: in 40 slogams sanjayan in 85 slogams archunan in 1 slogam thriutharastran and with the entire slogams sri kirishnan
all in one picture ie 700 slogams of gita in a picture
this is for your kind information
.yours srirangasri s r srinivasan srirangam
reply to this comment Thursday, 13.07.06, 19:09:52inspired by கலை அரசன். — #21 thanks with lot of love
reply to this comment Thursday, 13.07.06, 19:11:34by srirangasri
Dear sri,
I was in touch with Sri Srinivasan over phone, when I read the
article earlier. Such an unassuming person with great talents.
comments type அடிக்க திருத்த ரொம்ப படுத்துகிரது
அன்புடன்
reply to this comment Friday, 24.11.06, 10:15:42ராகவன்
dear desikan
adiyen srirangasri, srirangam
Now i have finished shri desikans' full stotrams nearly 900 slogams with 28 pictures for example in 108 slogamsof the dayasathagam the picture of the srinivasan with daya devi was drawn by me withe the blessings of achariya and perumal
this is for your kind information adiyen srirangasri14042007 sarvajith chitrai 1
reply to this comment Sunday, 15.04.07, 11:13:07அடடா.......... என்ன அருமையான பணி.
உங்க 4 படங்களும் நீங்க சொன்னதுபோல தெளிவா இல்லைதான்.
reply to this commentஅதுதான் ஒரு குறையா இருக்கு எனக்கு.
- this comment inspired srirangasri — #27
Wednesday, 18.04.07, 08:58:48inspired by Tulsi Gopal — #26 thank you for your support
reply to this comment Wednesday, 18.04.07, 21:41:46SR ஸ்ரீநவாசன் அவர்களை 22/4 தொடர்பு கொண்டபொழுது, அவர்கள்
தி்ருக்கண்ணகுடியில் இருப்பதாக சொன்னார். நேற்று (23/4) வருவதாக
சொன்னேன். மாலையில் நல்ல காற்றுடன் கூடிய மழை -. என் வாக்கை காப்பற்ற முடியவில்லை.
பி.கு: கோவிலுக்கு செல்லுமுன், ஓசி எனறதால் கடையில் விட்டுச்சென்ற எங்களின் செருப்புக்கள் மழை வெள்ளதில் அடித்துச்சென்றது எங்கள் வீ ட்டை சோ க வெள்ளத்தில் ஆழ்த்தியது.
reply to this comment- this comment inspired srirangasri1960@yahoo.co.in — #29
Tuesday, 24.04.07, 16:07:35inspired by பிச்சை ராகவன் — #28 really it is a good joke of thisyear
reply to this comment Tuesday, 24.04.07, 21:52:04Adult personal ads from swingers and swappers, couples, singles, bi,
reply to this comment Thursday, 28.02.08, 08:14:53swingers ads and wives amateur couples Swingers Club
sir
reply to this comment Wednesday, 14.10.09, 14:57:49it is very good and developing hindu metology
rangan