Desikan
எழுபத்தொன்று - சுஜாதா

அதிகாலையிலிருந்து போன்கால்கள், பொக்கேக்கள், பரிசுகள், ஏதோ நேற்றுப் பிறந்தவன்போல என்னை உணரவைக்கும் இந்தப் புதிய சங்கதிகளை என்னை விட என் எழுத்துக்கு நண்பர்கள் தரும் மரியாதையாக எண்ணி அதில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். பேரெழில் குமரன் ஒரு மிகப் பெரிய வாழ்த்து அட்டையில் என் போட்டோக்களை அமைத்து லாமினேட் பண்ணி அனுப்பியிருந்தார். குறைந்தபட்சம் அதைத் தயாரிக்க இரண்டு நாளாகியிருக்கும். அவர் என் பரம ரசிகர். மகனுக்கு வசந்த் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொன்னார்.
எழுபத்தோரு வயதைக் கடந்த இந்த தினத்தில் பி.ஜி.உட்ஹவுசின் over Seventy என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுபது வயதைக் கடந்ததும் இந்தப் புத்தகத்தை எழுதினார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த மாற்றங்களை அவருடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வுடன் எழுதினார். 'என்னப்பா! உனக்கு எழுபது வயதாகிறதாமே! பார்த்தால் 105 வயசான மாதிரி தெரிகிறாய். ஏன் இதைப் பற்றி எழுதி இன்னும் காசு பண்ணவில்லை?' என்று துவங்கி சில அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
''அமெரிக்காவில் இப்போதெல்லாம் மக்களுக்கு மரியாதை உணர்வு அதிகமாகிவிட்டது. இப்படித்தான் அன்று ந்யுயார்க்கில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவனை தன் விரோதி என்று எண்ணிக்கொண்டு ஒருவன் முதுகில் கத்தியால் குத்திவிட்டான். தவறை உணர்ந்ததும் 'ஸாரி' சொன்னான். இப்போதெல்லாம் மரியாதை அதிகமாகிவிட்டது''.
'கின்னஸ் ரிக்கார்டு'க்காக தொடர்ந்து நூறு முட்டை சாப்பிட்டவனை பேட்டி கண்டு எழுதுகிறார்.
''எப்படி இப்படியொரு சாதனை படைக்க வேண்டும் என்கிற உந்து சக்தி உனக்குக் கிடைத்தது?''
'எல்லாவற்றிக்கும் என் அம்மாதான் காரணம். அவளுக்காகத்தான் இதை செய்தேன். மகனே! உலகத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என்றாள்''
''எல்லாம் சரி. எப்படி நூறு முட்டை சாப்பிட முடிந்தது? என்ன என்ன பயிற்சிகள் செய்தாய்?''
''அது ஒன்றுமில்லை. முதலில் ஒரு முட்டை சாப்பிட்டேன். அதை முழுங்கியதும் இரண்டாம் முட்டையை சாப்பிட்டேன். அதன்பின் முட்டை நம்பர் மூணு.. இப்படி நாற்பத்தைந்தாவது முட்டையில் நிதானித்துக்கொண்டு நாற்¢பத்தாறாவதுக்குச் சென்றேன்.''
''உன்னால் நாட்டுக்கே பெருமையப்பா'' என்று கட்டுரையை முடிப்பார்.
உட்ஹவுஸ் போல் எனக்கு எழுத வராது. எழுபது வயதைக் கடந்ததைப் பற்றி நான் எழுத வேண்டுமென்றால் கவனிக்கும் விஷயங்கள் இவை. மெரினாவில் பலர் என்னை 'உடம்பு பரவாயில்லையா?' என்று விசாரிக்கிறார்கள். 'அதான் குண்டுக் கல் போல முன்னாலேயே நிற்கிறேனே' என்று பதில் சொல்வதற்கு பதிலாக மையமாக தலையாட்டுவேன். பலர், 'இப்ப நீங்க எழுதற 'கண்டதும் கேட்டதும் கல்கில விடாம படிக்கிறேன்' என்பார்கள். சிலர், 'இப்ப எதுல எழுதறிங்க?' என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , 'சார்! உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே. சட்டுனு நினைவு வரலை. நீங்க யாரு?' என்கிறார்கள். ஒருவர் என்னை கோபத்துடன் அணுகி, 'ஏன் சார், இவ்வளவு வயசான மாதிரி தெரியறீங்க?' என்றார்.
''வயசு எழுபத்து ஒண்ணு ஆய்டுத்து சார் எனக்கு.''
''இருந்தாலும் இன்னும் நீங்க சின்னவர்னு ஏன் நினைச்சேன்?''
எனக்கு வயசாவதனால் கோபம் கொள்ளும், கோபம் கொண்ட அனைவருக்கும் நன்றி.
- சுஜாதா
பிகு: நேற்று சுஜாதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது இந்த கட்டுரையை எழுதியிருக்கேன் என்றார். "சார், எனக்கு அனுப்பு வைத்தால் என் வலைப்பதிவில் போட்டு பேர் வாங்கிக்கொள்வேன்" என்றேன். சரி என்று அனுப்பிவைத்தார் அவருக்கு என் நன்றி.
போன வருடத்திய கட்டுரை:
15:18:03 - Thursday, 04.05.06 - சுஜாதா - 4120x -
Permalink
Karma points: -5. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search எழுபத்தொன்று சுஜாதா
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









சுஜாதாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
தேசிகன்...உங்களுக்கும் தான். இந்தக் கட்டுரையை வாங்கிப் போட்டு பேர் வாங்கிக் கொண்டதுக்குத்தான்.
reply to this comment- this comment inspired Desikan — #3
Thursday, 04.05.06, 16:32:57Happy Birthday to Sujatha.
reply to this comment Thursday, 04.05.06, 16:53:30inspired by கோ.இராகவன் — #1 உங்கள் வாழ்த்தை சுஜாதாவிற்கு அனுப்பிவைக்கிறேன். நன்றி.
reply to this comment Thursday, 04.05.06, 16:54:01சுஜாதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
reply to this comment Thursday, 04.05.06, 17:11:00ஹா ஹா
அருமை தோழனே
ஐயாவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துவிடவும்...

reply to this comment Thursday, 04.05.06, 17:11:30எப்போதும் போல சுஜாதா டச், + தேசி பஞ்ச்
நன்றிகள் பல,
ஸ்ரீஷிவ்...
தேசிகன்...பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி. அப்பிடியே டுபுக்கோட வாழ்த்தையும் சுஜாதா சார் கிட்ட சொல்லிடுங்க...எழுபத்தொன்னு ஆன மாதிரியே தெரியல சார் உங்களுக்கு...
(எதுக்கும் உங்களுக்கும் கொஞ்சம் சுத்திப் போட்டுக்கோங்க...நிறைய புகை வந்தது...உங்களுக்கு சுஜாதாவிடம் இருக்கும் நெருக்கம் பார்த்து ஹூம்...)
reply to this comment- this comment inspired Desikan — #7
Thursday, 04.05.06, 17:15:52inspired by Dubukku — #6 டுபுக்கு - எல்லோருடைய வாழ்த்தையும் அனுப்புவேன். கவலைபடவேண்டாம்.
reply to this comment Thursday, 04.05.06, 17:21:25என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்து கொள் தேசி..PG. woodhouse ன் அனைத்து jeeves சீரியல்களை படித்திருக்கிறேன்.
reply to this comment Thursday, 04.05.06, 17:37:55இப்போதுதான், தன் 70 வயது பற்றிய சுஜாதாவின் கட்டுரையை வாசித்தது போல் இருந்தது. அதற்குள் 71 வந்துவிட்டதா? வேகமாக ஒரு வருடம் ஓடிவிட்டதா...? அல்லது நான் தான் சென்ற பிறந்த நாள் கட்டுரையைத் தாமதமாகப் படித்தேனா? (தேசிகன் பரிந்துரைத்வுடன் படித்ததாக நினைவு)...
anyway, சுஜாதாவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்!
தேசிகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
reply to this comment- this comment inspired Desikan — #10
Thursday, 04.05.06, 17:50:44inspired by வெங்கடேஷ் வரதர — #9ஆமாம் நீங்கள் சொல்லுவது சரி. நேற்று இதை பற்றி கூட பேசிக்கொண்டிருந்தேன். காலம் வேகமாக ஓடுகிறது. நகர வாழ்க்கை நம்மை ஓட வைக்கிறதா என்று தெரியவில்லை. போன வருட கட்டுரைகளை சேர்த்திருக்கிறேன். நன்றி.
reply to this comment Thursday, 04.05.06, 17:56:00கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டதற்கு மிக்க நன்றி, தேசிகன். சுஜாதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
reply to this comment Thursday, 04.05.06, 18:38:37என்னோட வாழ்த்துகளையும் வாத்தியார்கிட்ட கொஞ்சம் சொல்லிடுங்க தேசிகன்.
reply to this comment Thursday, 04.05.06, 19:22:44Happy Birth day to Sujatha sir.71 vasulayum 17 vayasu mathiri niraya elutha Vaalthukkal. Dubai Raja.
reply to this comment Thursday, 04.05.06, 19:38:15எழுத்தாளர் சுஜாதா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
((
reply to this comment Thursday, 04.05.06, 20:02:16தேர்தல் நேரத்தில் கட்சித் தொண்டர் பேசுவதுபோல இருக்கிறதா ? -)))
ஆனால் இந்தப்பதிவை ஏன் நகைச்சுவை நையாண்டி என்று வகைப்படுத்தியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
எனக்குத்தான் இரசிக்கத் தெரியவில்லையா ?
Hello Desikan
Thank you for publishing the article, nice one
Happy Birthday Sujatha Sir, Many more happy returns of the day and we're expecting more and more novels and articles from you this year and the years to follow
Vijaykumar S
reply to this comment Thursday, 04.05.06, 23:31:53desikan,
reply to this comment Friday, 05.05.06, 06:07:14ஒரு வருடமா போய் விட்டது? சுஜாதா சாருக்கு என் வாழ்துக்களையும் சொல்லுஙகள். இனிமேல் குசலம் விசாரிக்காமல் ஹை சொல்லிவிட்டு நான் நடக்கிறேன் மெரினாவில். !! ம்னு
சுஜாதாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
reply to this comment Friday, 05.05.06, 14:35:23Hello Desikan,
Convey my warm regards to Sujatha sir,
I was waiting for your article on sujatha's Birthday and you have published sujatha's sir directly. Great work. I am also celebrating my birthday this week end.
reply to this comment Friday, 05.05.06, 20:00:52Convery my belated b'day wishes also to Sujatha sir. When I was writing this comment I got a doubt of where to put "also" word. May be I'm too getting old.
reply to this comment Saturday, 06.05.06, 07:48:19வாழ்த்துக்கள் தலைவா..
வாழ்த்துக்கள் தேசிகன் - இந்தக்கட்டுரையை தலையிடம் இருந்து பெற்றுப்பிரசுரித்ததற்கு.
reply to this comment Saturday, 06.05.06, 09:15:13இயல்பான நகைச்சுவை இன்னும் தலையிடம் விட்டுப்போகவில்லை!
So Dear Sujatha sir
i delivered my thanks to Ranganathar when i went there for one his master piece, i told him just we are waiting to have lot of science fictions, cover story about Nano-technology, Birabandam and its effect on human brain, few Govt departmental commedies, some punch dialogue for Rajini's next three movies, Vasanth's joke, katrathum-petrathum part 8, description about defects on in-born errors, to invite us for Ganesh's marriage, keep Sujatha's fame for 20min instead of 15 min, 10 more commenments for Adults, to teach unix to his grandson Sidharth and so on.
Ranganathar smiled. He knows the importance.
reply to this comment Saturday, 06.05.06, 23:36:59Vaallllthuukkkaaalllll sir
Long Live 'Shivaji" Sujatha!
reply to this comment Monday, 08.05.06, 17:00:26hi sujatha,
reply to this comment Friday, 12.05.06, 15:20:53BELATED WISHES
ur still young by mind age cannot wither u nor ur intelligence(john keats) i wish u late srry i saw this page only now. hope to meet u soon
this is my long standing wish.
சில்வியா பத்தி எதுவுமே எழுதலையே தேசிகன்
வசந்த் இன்னோவாவில் வந்து கலக்க ஆரம்பித்துள்ள சில்வியா முதல் வாரமே சூடாக ஆரம்பித்துள்ளது. ஜெ... யின் படமும் நாஸ்டால்ஜிக்காக இருக்கிறது
- அலெக்ஸ்
reply to this comment Tuesday, 16.05.06, 15:18:40I love sujatha words..actually i don't read any books of sujatha....but my friends said so much of his life so i like him.....
reply to this comment Thursday, 22.01.09, 12:26:39