Desikan
Monday, 03.05.10
தோசை
சொல்வனத்தில் வந்த என் சிறுகதை - தோசை. சுஜாதா பிறந்த நாளான இன்று அதை என் வலைப்பதிவில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி.
Thursday, 01.04.10
பில்லா
இந்த வாரம் சிறுகதை - பில்லா
Friday, 05.02.10
பூவா தலையா
இந்த வார சொல்வனத்தில் வந்த சிறுகதை பூவா தலையா
Tuesday, 26.01.10
லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே

சில வருடங்களுக்கு முன் என் சின்ன மாமியார் பொண்ணு 'லாலு' ஒரு வித்தியாசமான கதையை எழுதியிருந்தாள் . அவளுக்கு எழுதும் ஆர்வம் இருக்கு என்று சில வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்தேன். கார்ட்டூன் படமும் போடுவாள்.
சென்னைக்கு செல்லும் போது, அவளுடன் வயது வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவது ஒரு இனிய அனுபவம்.
நேற்று லாலுவுடன் பேசிக்கொண்டிருந்த போது "சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாமல், என் கதையை சின்ன குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்" என்று அதிர்ச்சியாக சொன்னாள். லாலுவிற்கு பாராட்டுக்கள் !
போன வருஷம் இந்த கதையை நான் தமிழில் 'ரீமேக்' செய்ய உன் பர்மிஷன் வேண்டும் என்றவுடன், உங்களுக்கு இல்லாத பர்மிஷனா அத்திம்பேர் என்றாள். நானும் அதை தமிழில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன் வார பத்திரிக்கைகளுக்கும், சில இணைய தளங்களுக்கும் அனுப்பினேன், அனுப்பியவுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பல மாதமாக சும்மா இருந்த கதையை லாலுவிற்கு நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.
படிப்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இது நகைச்சுவை கதை.
லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே
ஐயங்கார் ஆத்துப் பையனோ பெண்ணோ வார இறுதியில், வேளை கெட்ட வேளையில், அமெரிக்காவிலிருந்து போனில்,
“அப்பா சௌக்கியமா?" என்று கேட்டதும், “அங்கே இப்ப என்ன டைம்?” என்று அப்பாவும் வழக்கமான கேள்வி கேட்டுவிட்டு, குடும்ப விஷயங்களைப் பேசிக் கொள்ளும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குச் சென்று, “என் பையன் சின்சின்னாட்டில இருக்கான்” என்று சொல்லிப் பாருங்கள். “என் பையன் சான் ஹோசே” என்று பதில் வரும்.
இப்ப அந்த குடும்பம் உங்க கண்முன்னே ஒரு பிம்பம் மாதிரி தெரிந்திருக்கணுமே ?
'அட, நம்ம மைலாப்பூர் ‘பாச்சா’ குடும்பம் மாதிரியே இருக்கே,' என்று நினைப்பவர்கள் வலது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள். 'இல்ல, இல்ல. இது நம்ம திருவல்லிக்கேணி 'நச்சு' குடும்பம் தான்' என்று நினைப்பவர்கள் இடது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள்.
போன வாரம் 'தேங்க்ஸ் கிவிங்,கிற்கு முதல் நாள் கிட்டத்தட்ட ஒரே நேரத்துக்கு நரசிம்மன், பாச்சா குடும்பங்களுக்கு மேலே சொன்ன “இப்ப என்ன டைம்?” போன்கால் வந்தது.
Monday, 30.03.09
பாச்சை உருண்டை
பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும். நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது.
Older articles:
20.04.2007
- ராமானுஜலு [comments: 49] 26.08.08 02:36
03.07.2006
- உயிர் நண்பன் [comments: 47] 12.07.09 13:59
30.12.2005
- மூக்குப்பொடி [comments: 25] 10.10.06 16:03
07.11.2005
- தி கிரேட் எஸ்கேப் [comments: 26] 10.10.06 16:05
07.09.2005
- சாமி படம் [comments: 34] 28.02.09 10:45
05.04.2005
- நானும் ஒரு டஜன் பெண்களும் [comments: 1] 22.08.07 17:50
16.11.2004
- அப்பாவின் ரேடியோ [comments: 5] 16.11.06 22:19
18.08.2004
- கீச்கீச் [comments: 1] 26.09.05 12:37
06.07.2004
- வின்னி [comments: 5] 31.12.05 19:15





12:55:24 -







